ஐபிஎல் 2024 : இதுதான் மஞ்சள் படையின் பவர்! சிஎஸ்கே போட்டிக்கு கூடுதல் ரயில் இயக்கம் ..!

ஐபிஎல் 2024 : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற ஏப்ரல்-8ம் தேதி நடைபெறும் சென்னை-கொல்கத்தா போட்டிக்கு சென்னையில் உள்ள சிந்தாதிரி முதல் வேளச்சேரி வரை கூடுதலாக ரயில்களை இயக்க திட்டம்.

ஐபிஎல் தொடரில் அதிக எதிர்பார்ப்புகள் நிறைந்த போட்டியாக காணப்படுது சென்னை அணியின் போட்டியாகும். அப்படிப்பட்ட சென்னை அணியின் போட்டிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் முன்கூட்டியே டிக்கெட்டுகள் நேரில் விற்கப்படாது என சென்னை நிர்வாகம் இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்பே அறிவித்திருந்தது.

அதன் படி இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற அனைத்து சென்னை அணி போட்டிகளுக்கும் டிக்கெட் ஆனது ஆன்லைனில் தான் பெறப்பட்டது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது, அதில் முதல் இரண்டு போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டு போட்டியிலும் சென்னை அணி அபாரமாக வெற்றியை பெற்றது.

அதை தொடர்ந்து 3-வது போட்டியில் டெல்லியிடம் தோல்வியை தழுவிய சென்னை அணி தற்போது, ஹைத்ராபாத்தில் தனது 4-வது போட்டிக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 22-வது போட்டியாக வருகிற ஏப்ரல் -8 ம் தேதி சென்னை அணி சேப்பாக்கத்தில் கொல்கத்தா அணியை சந்திக்க உள்ளது.

இரண்டு போட்டிகளுக்கு பிறகு மீண்டும்  போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுவதால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும் என்பதற்காக சிந்தாதிரி முதல் வேளச்சேரி வரை கூடுதலாக ரயில்கள் விட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதிலும், சென்னை அணியின் ரசிகர் கூட்டம் கூடும் என்பதையும், நாடளுமன்ற தேர்தல் ப்ரச்சாரங்கள் ஆங்காங்கே நடைபெறுவதாலும் கூடுதலாக ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.