“இதுதான் என்னுடைய கடைசி கிளப்”! மெஸ்ஸி கொடுத்த அப்டேட்..!

“இதுதான் என்னுடைய கடைசி கிளப்”! மெஸ்ஸி கொடுத்த அப்டேட்..!

Messi

மெஸ்ஸி: கால்பந்து ஜமாபவனான லியோனல் மெஸ்ஸி, தனது ஓய்வை குறித்து மறைமுகமாக அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார்.

லியோனல் மெஸ்ஸி தற்போது, இன்டெர் மியாமி என்ற ஒரு அமெரிக்கா கிளுப்பிற்காக விளையாடி வருகிறார்.  இவர் இதற்கு முன் பார்சிலோனா, பாரிஸ் செயிண்ட் ஜெர்மன் கிளிப்பிற்காகவும் விளையாடி இருக்கிறார். அதிலும் குறிப்பாக பார்சிலோனா கிளப்பிற்காக 17 சீசன்கள், அதாவது 17 ஆண்டுகள் விளையாடி இருக்கிறார்.

அதில் மட்டும் 778 போட்டிகளில் விளையாடி ஒரு கிளப்பிற்க்காக அதிக  போட்டிகளை விளையாடிய விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதனுடன் அந்த கிளப்பிற்காக மட்டும் 672 கோல்களை அடித்து அசத்தி இருக்கிறார். மேலும், அதிக வெற்றிகள், அதிக விருதுகள் என அவரது பெயரும், வெற்றியும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இவர் கிளப் போட்டிகளை தாண்டி, சர்வேதேச போட்டிகளிலும் அர்ஜென்டினா அணியில் அசத்தி இருக்கிறார். கடந்த 2022 ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையில்  அர்ஜென்டினா அணியின் கேப்டனாக செயல்பட்டு அந்த ஆண்டின் கோப்பையும் தட்டி தூக்கினார். அதன் பிறகு ஓய்வு பெறுவார் என எதிர்பார்த்த போது மீண்டும் கிளப் போட்டிகளுக்காக விளையாட தொடங்கினார்.

இவர் சமீபத்தில்  ஈஎஸ்பிஎன் (ESPN) க்கு அளித்த ஒரு பேட்டியில் அவரது ஓய்வை குறித்து மறை முகமாக பேசி இருந்தார். அவர் பேசிய போது, “நான் தற்போது கால்பந்தை விட்டு ஓய்வு பெறுவதில் தயாராக இல்லை. நான் ஓய்வு பெற்றாலும் என் வாழ்நாள் முழுவதும் இதை செய்வேன், இந்த பயிற்சிகள்,  விளையாட்டுகளை நான் ரசிக்கிறேன்.

எல்லாம் முடிந்துவிடுமோ என்ற பயமும் ஒரு பக்கம் எனக்கு இருக்கிறது.  மேலும், இன்டர் மியாமி கிளப் தான் எனது கடைசி கிளப்பாக இருக்கும். வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பையில் எனது உடல் தகுதியை பொறுத்தே நான் விளையாடுவேன் ” என்று கூறி இருந்தார். இதனால் அவரது ரசிகர்கள், ‘மெஸ்ஸி கால்பந்திலிருந்து ஓய்வை அறிவிக்க போகிறேன்’ என்பதை மறைமுகமாக கூறுகிறார் என்று வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

Join our channel google news Youtube