பொன்.மாணிக்கவேல் காணாமல்போன சிலைகள் பலவற்றை மீட்க முயற்சி எடுக்கவில்லை…!ஏடிஎஸ்பி பரபரப்பு தகவல்

பொன்.மாணிக்கவேல் காணாமல்போன சிலைகள் பலவற்றை மீட்க முயற்சி எடுக்கவில்லை என்று ஏடிஎஸ்பி இளங்கோ  தெரிவித்துள்ளார்.
சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக  தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு  நவம்பர் 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நவம்பர் 30 ஆம் தேதியுடன் பணிஓய்வு பெற உள்ள நிலையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதில்  சிறப்பு அதிகாரியாக, பொன்.மாணிக்கவேல் ஒராண்டுக்கு நியமனம் செய்தும் உத்தரவு பிறப்பித்தது.பொன்.மாணிக்கவேல் தான் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு தலைவராக இருப்பார் என்றும் நீதிபதி மகாதேவன் அதிரடி உத்தரவு  பிறப்பித்தார்.

தனித்தனி விசாரணை அதிகாரிகள் இருந்தும் அவர்களை சுதந்திரமாக பணிசெய்ய பொன் மாணிக்கவேல் அனுமதிக்கவில்லை. காணாமல்போன சிலைகள் பலவற்றை மீட்க முயற்சி எடுக்கவில்லை. ஆனால் கைதுசெய்ய நிர்பந்திக்கிறார் பொன் மாணிக்கவேல் தலைமையில் எங்களால் செயல்பட முடியாது.
காணாமல்போன சிலைகள் பலவற்றை மீட்க முயற்சி எடுக்கவில்லை. ஆனால் கைதுசெய்ய நிர்பந்திக்கிறார் பொன் மாணிக்கவேல் தலைமையில் எங்களால் செயல்பட முடியாது என்றும்  ஏடிஎஸ்பி இளங்கோ  தெரிவித்துள்ளார்.

Leave a Comment