கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் அனைவரும் துறைமுகத்திற்கு திரும்பவேண்டும்…!மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் அனைவரும் துறைமுகத்திற்கு திரும்பவேண்டும் என்று கடலோர காவல்படையினர் அறிவுறுத்தி வருகின்றனர் என்று  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் , மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை அதி கனமழை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது.நேற்று உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வலுவான குறைவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் இருக்கிறது.குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளுக்கு இன்று முதல் 8ம் தேதி வரை மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்.ஆனால் ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்பப் பெறப்படுகிறது என்றும் அறிவித்தது.ஆனால் இதன் பின்  மீண்டும்  இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் ,தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் அறிவிப்பு வெளியிட்டது. அதாவது வருகின்ற 9 ஆம் தேதி வரை கனமழை பெய்யும்.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.அதாவது கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து லட்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் அனைவரும் துறைமுகத்திற்கு திரும்பவேண்டும் என இந்திய கடலோர காவல்படையினர் கப்பல்கள், விமானங்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர் என்று  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment