பிரச்னையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம்-அமைச்சர் சி.வி.சண்முகம்

திமுக சட்டமன்ற  உறுப்பினர் தங்கம் தென்னரசு  தமிழகத்தின் எதிர்ப்பை மீறி தபால் துறை தேர்வுகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் நடத்தப்பட்டது குறித்து பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளித்தார்.அவர் அளித்த பதிலில், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிந்துகொண்டு அடுத்தக்கட்ட முடிவை எடுக்கலாம் என முதல்வர் கூறியிருக்கிறார். தீர்மானம் நிறைவேற்ற முடியாது என எந்த இடத்திலும் முதல்வர் கூறவில்லை.24 மணி நேரம் பொறுத்துக்கொள்ள முடியாதா? எதை எடுத்தாலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
ஏதாவது ஒரு திட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்து பிரச்னையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் என்று விளக்கம் அளித்தார்.