பிரதமர் , முதல்வர் , துணைமுதல்வர் விழாவில் இப்படியா…..சர்ச்சையில் சிக்கிய எய்ம்ஸ் அடிக்கல் விழா…!!

மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் தேசிய கீதம் , தமிழ்தாய் வாழ்த்து இடம் பெறாதது சர்சையை ஏற்படுத்தியுள்ளது

மதுரையில் உள்ள தோப்பூரில் சுமார் 1,264 கோடியில் அமைய இருக்கும்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனால்  ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை  திட்டம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

இந்த திட்டத்திற்க்காக 1, 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அமையவுள்ள எய்ம்ஸ் , மருத்துவமனையில் 750 படுக்கை வசதி , 100 மருத்துவ படிப்பிற்கான இடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நட்டு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் . இந்த விழாவில் இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் தொடக்கத்திலும் சரி , முடிவிலும் சரி தமிழ்தாய் வாழ்த்தும் மற்றும் தேசிய கீதம் இடம்பெறாதது பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.ஒரு அரசு விழா அதுவும் பிரதமர் , முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்கும் விழா எப்படியா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment