அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கு! தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிப்பு

ADMK: அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கின் தீர்ப்பு தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வரும் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

Read More – தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்..! தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது

இந்த நிலையில் மக்களவை தேர்தலின் போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தக் கூடாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Read More – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான வழக்கு! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்த வழக்கில் 18 ம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, “வழக்கு முடியும் வரை அதிமுக கொடி மற்றும் சின்னம் முதலியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த மாட்டேன் என உத்தரவாதம் அளித்திருந்தார்” என மனுவில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment