#Breaking:ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகளுக்கு எதிரான வழக்கு வாபஸ்!

சென்னை:கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு  பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி முன்னதாக அறிவித்திருந்தார்.அதன்படி,நேற்று முதல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்,கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக் கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது,மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் எனக் கூறி ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில்,ஆன்லைன் தேர்வுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.அதன்படி,அவரின் மனுவை வாபஸ் பெற அனுமதித்து,இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

author avatar
Castro Murugan