நூல் விலை மேலும் உயர்வு.. பின்னலாடை வர்த்தகம் பாதிப்பு!

நூல் விலை கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் அதிகரித்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை தயாரிப்பாளர்கள் கவலை.

நூல் விலை மேலும் உயர்ந்திருப்பதால் பின்னலாடை வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. நூல் விலை கிலோவுக்கு மேலும் 10 ரூபாய் அதிகரித்துள்ளதால் திருப்பூர் பின்னலாடை தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நூல் விலையை குறைக்க மத்திய நிதிநிலை அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதுதொடர்பாக எந்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது ஏமாற்றமாக அமைந்துள்ளது.

மூலப்பொருள் உயர்வால் ஏற்கனவே ஜவுளிதுறையில் தொய்வு ஏற்பட்டுள்ளநிலையில், நூல் விலை மீண்டும் உயர்ந்திருப்பது கவலையளிக்கிறது. ஓராண்டுக்கு முன் ரூ.220 முதல் ரூ.230 வரை இருந்த ஒரு கிலோ நூல் விலை தற்போது ரூ.390 ஆக அதிகரித்துள்ளது. ராகத்தின் அடிப்படையில் நூல் விலை ஒரு கிலோ ரூ.340 முதல் ரூ.390 வரை உள்ளது. ஒவ்வொரு ரகத்திற்கும் சராசரியாக ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் மட்டும், ஒரே மாதத்தில் நூல் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது.

இதன்காரணமாக திருப்பூர் பின்னலாடை தொழில் சாற்றி சரிவை சந்தித்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 தொழில்துறை கூட்டமைப்புகள் ஒன்றுசேர்ந்து மாவட்ட முழுவதுமே ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் என்பது நடத்தப்பட்டது. இதன்பின்னர் நூலின் விலை ரூ.10 குறைக்கப்பட்டது. ஆனால் அடுத்த மாதத்திலேயே ரூ.30 உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

author avatar
Castro Murugan