SK23 படத்தோட பட்ஜெட் ‘சம்பளத்தில் போயிடும் போல’ ! பிரபலங்கள் வாங்கிய சம்பளம்!

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.  இவர்கள் இருவரும் இணையும் படம் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை  கூட கடந்த  சில நாட்களுக்கு  முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Read More : – ஜெயிலர் 2 ரெடி ஆயிட்டு இருக்கு! ரகசியத்தை கசியவிட்ட பிரபல நடிகை?

இதற்கிடையில், இந்த திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் படத்திற்காக பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.அதன்படி , இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 75 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாம். படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் சம்பளமாக 30 கோடி வாங்கி இருக்கிறாராம்.

அதைப்போல, படத்தை இயக்கம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்காக 20 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறாராம். அதைப்போல படத்திற்கு இசையமைக்கும் இசையமைப்பாளர் அனிருத் 7 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் படத்தோட பட்ஜெட் ‘சம்பளத்தில் போயிடும் போல’   என கலாய்த்து வருகிறார்கள். விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment