30% நிதி.. பேரு மட்டும் ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’.! அமைச்சர் கடும் விமர்சனம்.!

Minister Thangam Thennarsu says about Pradhan Mantiri Awas Yojana

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் கடைசி நாள் நடைபெற்றது. இன்றைய நாளில் 2024-25ஆம் ஆண்டு தமிழக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் மீது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் நிதி தமிழக அரசு திட்டங்கள் குறித்து பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். மதுரை எய்ம்ஸ்… கோவை நூலகம்.! சட்டப்பேரவையில் முதல்வர் கூறிய முக்கிய தேதி.! வீடுகட்ட 1.2 லட்சம் : அவர் கூறுகையில், … Read more

மேகதாது விவகாரம்… ஒரு செங்கல் கூட வைக்க முடியாது.! இபிஎஸ் தீர்மானம் மீது துரைமுருகன் பதில்.!

Edappadi Palanisamy - Minister Duraimurugan

தமிழக சட்டப்பேரவையில் இன்று இறுதி நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கவனஈர்ப்பு தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த தீர்மானத்தில் காவிரி மேலாண்மை வாரிய பணிகள் முழுதாக வரையறுக்கப்பட்டுள்ளது என்றும், மேகதாது  அணை விவகாரம் குறித்தும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும், … Read more

போதிதர்மருக்கு மணிமண்டபம்.! கோரிக்கை வைத்த திமுக எம்.எல்.ஏ.!

DMK MLA Ezhilarasan say about Bodhidharma

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பிறகு கடந்த திங்கள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். நேற்று பிப்ரவரி 20ஆம் தேதி 2024-2025ஆம்  ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனை அடுத்து இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை கூடியது. அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி குறித்த கோரிக்கைகளை … Read more

Today TNBudget Live : இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலை நிகழ்வுகள்…

Today TN Assembly Live

நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து நேற்று 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

TNBudget 2024 Live : தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேரலை நிகழ்வுகள்….

tn budget 2024

கடந்த வாரம் பிப்ரவரி 12ஆம் தேதியன்று ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது . அதற்கடுத்து 2 நாள் கூட்டத்தொடர் , கடந்த வியாழன் அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன் கடந்த வார கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து இன்று தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இன்றைய தமிழக நிதிநிலை அறிக்கையில், சமூகநீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல … Read more

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை முத்திரை சின்னம் வெளியீடு..!

TNBudget2024

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு “2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வருகின்ற 19-ஆம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் இதை தொடர்ந்து 20-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் எனவும் பட்ஜெட் கூட்டம் வருகின்ற 22ஆம் தேதி வரை நடைபெறும்” என அறிவித்தார். 1 ட்ரில்லியன் பொருளாதாரம்.. வெள்ளை அறிக்கை வேண்டும்.! … Read more

1 ட்ரில்லியன் பொருளாதாரம்.. வெள்ளை அறிக்கை வேண்டும்.! இபிஎஸ் சரமாரி குற்றசாட்டு.! 

Edappadi Palanisamy - Tamilnadu CM MK Stalin

இன்று தமிழக சட்டப்பேரவையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் நாளில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளிக்கும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வு நிறைவு பெற்ற பின்னர் தலைமை செயலக வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், அதிமுக ஆட்சி காலத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகள் தற்போது ஏற்கப்படாமல் இருக்கின்றன. குறிப்பாக 11.12.2017இல் அதிமுக ஆட்சியில் 12 ஆரம்ப சுகாதர நிலையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. … Read more

33 மாதங்கள்.. திராவிட அரசின் திட்டங்கள்… நீண்ட பட்டியலை கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

Tamilnadu CM MK Stalin speech in TN Assembly

கடந்த திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்திற்காக தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஆரம்பித்தன. அதில் தமிழக அரசு அளித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி அதனை புறக்கணித்து, சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையை வாசித்தார். மேலும் ஆளுநர் பேசியது சட்டப்பேரவை குறிப்பில் இடம்பெறாது என்றும், அரசு கொடுத்த உரைதான் சட்டப்பேரவை நிகழ்வில் பதியப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதனை அடுத்து, நேற்று முன்தினம் … Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : கலைஞர் பெயர் வைத்தது தான் ஒரே காரணம்.! சேகர்பாபு பரபரப்பு…

Kalaignar Bus Terminus - Minister Sekar babu

சென்னையில் பேருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னை புறநகர் பகுதியில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வர தாமதமாவதால் பயணிகள் அவதிக்கு உள்ளாவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து குற்றசாட்டுகளை முன்வைத்தனர். அந்த கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு விரிவான விளக்கத்தை அளித்தார். அப்போது … Read more

விரைவில் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடக்க விழா – அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

duraimurugan

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக நடைபெற்றது வருகிறது. இன்றைய நிகழ்வுகளில் தற்போது, சட்டப்பேரவையின் கேள்வி – பதில் நேரம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்றி மூலமாக நீர் நிரப்பும் திட்டத்தை அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த பணி சுணக்கமாக நடைபெற்று வருகிறது, இதை துரிதப்படுத்த வேண்டும் … Read more