‘டைம் அவுட்’ சர்ச்சை… பயத்துடன் அனுமதி கேட்ட கிறிஸ் வோக்ஸ்..!

இன்று 40 ஆவது உலகக்கோப்பை லீக் போட்டியில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இங்கிலாந்து அணியும், நெதர்லாந்து அணியும் மோதி வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் இறங்கிய  நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 339 ரன்கள் குவித்தனர். இதில் அதிகபட்சமாக  பென் ஸ்டோக்ஸ் 108 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 51 ரன்களும், தொடக்க வீரர் டேவிட் மாலன் … Read more

ENGvsNED: இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.!

ENG vs NED

ENGvsNED: ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இன்று, புனேவில் உலா மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் 40 ஆவது லீக் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து அணியானது நெதர்லாந்து அணியுடன் நேருக்கு நேர் மோதுகிறது. இந்த தொடரில் இருந்து இங்கிலாந்து அணி ஏற்கனவே வெளியேறியதை தொடர்ந்து, இன்று நடைபெறுகிற லீக் போட்டியில் தனது திறமையை வெளிக்காட்ட களமிறங்குகிறது. நடப்புத் தொடரில் இதுவரை விளையாடிய ஏழு போட்டியில், ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்ற … Read more

இரட்டை சதம் அடித்த முதல் ஆஸ்திரேலிய வீரர்… ஒரே போட்டியில் பல சாதனை படைத்த மேக்ஸ்வெல் ..!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய 38-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழந்து  291 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் 143 பந்துகளில் 129* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 292 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் … Read more

இரட்டை சதம் விளாசிய மேக்ஸ்வெல்.. 3-வது அணியாக அரையிறுதிக்கு சென்ற ஆஸ்திரேலியா..!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 38-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் அணியின் தொடக்க  வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். இதில், தொடக்க வீரர் குர்பாஸ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இவரை தொடர்ந்து ரஹ்மத் ஷா களமிறங்கினார். இதைத்தொடர்ந்து, இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா இருவரும் கூட்டணி … Read more

AUSvAFG : இப்ராஹிம் சத்ரான் அதிரடியான சதம்… ஆஸ்திரேலியாவுக்கு 292 ரன்கள் வெற்றி இலக்கு!

Ibrahim Zadran

2023ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இன்றைய 38-வது லீக் போட்டியில் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும், பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்று ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் களமிறங்கினர். இதில், நட்சத்திர பேட்ஸ்மேன் குர்பாஸ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். … Read more

AUSvsAFG: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான்..! பந்துவீச்சுக்குத் தயாரான ஆஸ்திரேலியா.!

AUS vs AFG

AUSvsAFG: ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற நிலையில், இன்று 38-வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மொத்தமாக உள்ள 45 லீக் போட்டிகளில் 37 போட்டிகள் முடிந்தநிலையில், 38-வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. பத்து நாடுகளின் அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகள் இதுவரை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. பங்களாதேஷ், இலங்கை, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் அணிகள் அரையிறுதிக்கு … Read more

“டைம்டு அவுட்” டிஸ்மிஸல் – ஆதாரங்களை பகிர்ந்து கேள்வி எழுப்பிய ஏஞ்சலோ மேத்யூஸ்!

Angelo Mathews

இலங்கை – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இரு அணிகளும் ஏற்கனவே உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்த நிலையில், ஆதரவு வெற்றிக்காக போட்டியிட்டனர். இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன், இலங்கை அணியை முதலில் பேட்டி செய்ய கேட்டுக்கொண்டார். அதுபோன்று, 5 ரங்களில் முதல் விக்கெட்டை இழந்த இலங்கை அணி, அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து வந்தனர். … Read more

வீணான அசலங்கா சதம் .. 3 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் திரில் வெற்றி..!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 38-வது லீக் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகள் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணியில் முதலில் பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் முதல் ஓவரின் கடைசி பந்தில் குசல் பெரேரா 4 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து … Read more

146 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம் .. கடுப்பான ஏஞ்சலோ மேத்யூஸ்..!

வங்கதேசம்-இலங்கை போட்டியின் போது ​​146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் நடக்காத ஒன்று நடந்தது. இந்த போட்டியில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஒரு பந்து கூட விளையாடாமல் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை எந்த பேட்ஸ்மேனும் இப்படி அவுட் ஆகி பெவிலியன் திரும்பி சென்றது இல்லை. கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது. இலங்கை வீரர் சதீர சமரவிக்ரம அவுட் ஆன பிறகு, ஏஞ்சலோ மேத்யூஸ் பேட்டிங் செய்ய களத்திற்கு வந்தார். ஆனால் ஏஞ்சலோ … Read more

BAN vs SL: சதமடித்து விளாசிய சரித் அசலங்கா.! பங்களாதேஷ் அணிக்கு 280 ரன்கள் இலக்கு.!

BANvSL

BAN vs SL: ஒருநாள் உலக கோப்பை தொடரில் 38வது லீக் போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லாத பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணியில் முதலில் பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்கள். இதில் நிஸ்ஸங்க பவர் … Read more