நீயின்றி உடல் இல்லை, உயிர் இல்லை, ஏன் உலகமும் இல்லை. இன்று உலக நீர் தினம்(22.03.2022)..!

தண்ணீர்தான்  உலகில்  உள்ள அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆதாரம். அதற்கு ஈடு இணை ஏதும் இல்லை. தண்ணீருக்கு மாற்று இவ்வுலகில்  ஏதுமில்லை. தண்ணீர் புவியில் கிடைக்கும் வற்றாத ஒரு செல்வமும் அல்ல, அதை வீணாக்கக்கூடாது. தண்ணீரின் முக்கியத்துவம், அதன் தேவை உணர்த்தும் நோக்கில் ஐ.நா. சபை டிசம்பர் 1992ஆம் ஆண்டில் ஒரு தீர்மானத்தின்மூலம் மார்ச் 22ஐ உலக தண்ணீர் தினமாக அறிவித்தது. 1993ஆம் ஆண்டு முதல் இது கொண்டாடப்படுகிறது. இன்று உலகம் முழுவதும் சர்வதேச தண்ணீர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்துக்கு இணங்க … Read more

இன்று மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம்…!!

மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நீர் இன்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது என்பதும் நன்கு அறிந்ததே. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது. அதற்கும் மனித இனம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.1993ஆம் ஆண்டு முதல் … Read more