ஆப்கானிஸ்தானின் புதிய அரசின் அமைச்சரவை பட்டியலை வெளியிட்டது தலிபான் அமைப்பு!

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான் அமைப்பினர் மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ளனர். கடந்த 15-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றிவளைத்த தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து, 20 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்க படை முழுவதும் ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு முழுவதும் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரத்தையும் தங்கள் வசப்படுத்தினர். இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தைக் கட்டமைப்பதற்காகவே ஒரு சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக இழுபறி நிலவிய நிலையில், … Read more

பஞ்ச்ஷிர் மாகாணம் எங்கள் வசம் – தலிபான்கள் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானின் கடைசி மாகாணமான பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றியதாக தலிபான் அமைப்பினர் அறிவிப்பு.  ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருந்த தலைநகர் காபூலுக்கு வடக்கே உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் நேற்று கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். காபூலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால், ஆப்கானிஸ்தான் முழுவதையும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம். பிரச்சனையாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் பஞ்ச்ஷிர் இப்போது எங்கள் வசம் உள்ளது என்று தலிபான் தளபதி கூறினார். எதிர்க்கட்சிப் படைகளின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் துணைத் … Read more

ஆப்கானிஸ்தானில் இன்று ஆட்சியமைக்கிறது தலிபான்….!

ஆப்கானிஸ்தானில் இன்று தலிபான்கள் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் அந்நாட்டில் குடியிருந்த இந்தியா, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பிற நாட்டு மக்கள் அனைவரும் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறினர். இந்நிலையில், தலிபான்கள் ஆட்சி அமைத்த சிறிது நாட்களிலேயே ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சில மோசமான செயல்களை செய்தனர். மேலும் பெண்களுக்கான உரிமைகளும் மறுக்கப்பட்டு வந்தது. … Read more

இந்தியாவுக்கு எங்களால் அச்சுறுத்தல் வராது- தலிபான்கள்!

இந்தியா முக்கியமான நாடு, அந்நாட்டிற்கு எங்களால் எந்த அச்சுறுத்தலும் இருக்காது என தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் நாட்டில் இருந்த இந்தியா, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட பிற நாட்டு மக்களும் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இது குறித்து பேசி உள்ள தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லாஹ் முஜாஹித் அவர்கள், எங்களால் வேறு எந்த நாட்டுக்கும் அச்சுறுத்தல் … Read more

காபூல் விமான நிலையத்திற்கு சீல் வைத்த தலிபான்கள்…!

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்திற்கு தலிபான்கள் சீல் வைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்கா, இந்தியா மற்றும் இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மக்களும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்களும் அவசர அவசரமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையம் அமெரிக்க ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், இந்த விமான நிலையம் மூலமாக மக்கள் அனைவரும் பிற நாடுகளுக்கு … Read more

நான் என் நாட்டை நேசிக்கிறேன் ; ஆனால் இங்கு இருந்தால் உயிரிழந்து விடுவேன் – ஆப்கான் பெண் பத்திரிகையாளர்!

ஆப்கானிலிருந்து வெளியேறிய பெண் பத்திரிகையாளர், தனது நாட்டை தான் நேசிப்பதாகவும், ஆனால் நான் பத்திரிகையாளர் என தெரிந்தால் என்னை கொன்று விடுவார்கள் எனவும் அழுதுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கான் நாட்டை சேர்ந்த மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் தற்பொழுது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெறுகிறது என அண்மையில் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பெண் … Read more

தலிபான் தலைவருடன் அமெரிக்க உளவுத்துறை தலைவர் ரகசிய சந்திப்பு …!

தலிபான் தலைவருடன் அமெரிக்க உளவுத்துறை தலைவர் வில்லியம் பர்ன்ஸ் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியுள்ளதால்  தலிபான்கள் நாட்டை கைப்பற்றி உள்ளனர். மேலும், தலிபான்கள் விரைவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். எனவே அந்நாட்டு மக்கள் பலரும் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் … Read more

ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்க படைகள் வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் – தலிபான்கள் எச்சரிக்கை!

வருகின்ற ஆகஸ்ட் 31-க்குள் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் மற்றும் அங்கிருந்து வெளியேற விரும்பக்கூடிய மக்களை மீட்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் கலவரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக கனடா, பிரான்ஸ், … Read more

காபூல் விமானநிலைய கூட்டத்தில் சிக்கி 7 பேர் பலி..!

ஆப்கானிஸ்தான் நாட்டில்  உள்ள காபூல் விமான நிலையத்தில் உள்ள கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர், ஒரே வாரத்தில் தாலிபான்கள் முக்கிய நகரங்களை கைப்பற்றினர். தற்போது ஆப்கனில் புதிய அரசை நிறுவ முனைப்போடு செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இதன் காரணத்தால் பலரும் ஆப்கனை விட்டு வெளியேறி வருகின்றனர். அதனால் விமான நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. குறிப்பாக காபூல் விமான நிலையம் நோக்கி மக்கள் படையெடுப்பதால் அங்கு சமாளிக்க … Read more

அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டம்? – அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை!

அமெரிக்க அரசாங்கப் பிரதிநிதியின் தனிப்பட்ட அறிவுறுத்தல்கள் இல்லாமல் காபூல் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு குழுவுக்கு எதிரான பாதுகாப்பு நிலைமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது குழு நேற்று வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தியது. துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் பயணத்தின் போது பாதுகாப்பான காணொளி வாயிலாக ஆலோசனையில் கலந்துகொண்டார். இந்த ஆலோசனையில், மாநில … Read more