சிங்கம் களமிறங்கிடுச்சேஏஏஏ…!!!இனி சிங்கத்தின் வேட்டை தொடரும்….

சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆண்டு முதல் களமிறங்க உள்ள தகவலை அந்த அணிக்கான டிவிட்டர் பக்கம் நேற்று இரவு அதிகாரப் பூர்வமாக மீண்டும் அறிவித்துள்ளது. மும்பை மற்றும் புனே அணிகள் நடுவேயான நேற்றைய பைனல் போட்டி நிறைவடைந்த பிறகு, இந்த டிவிட்டை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு பெரிய விசிலு அடிங்க என்ற கோஷம் இந்த அணிக்கானது. அணியின் கேப்டனாக ஆரம்பம் முதலே டோணிதான் செயல்பட்டு வந்தார். அவர் புனே அணிக்காக ஆடிய … Read more

யார்???? பந்துவீச்சு பயிற்சியாளர் குமிடி பிடி சண்டையில் சாஸ்த்ரி ……

டெல்லி: இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரவி சாஸ்திரி தனது அணியின் பிற பயிற்சியாளர்கள் நியமிப்பதில் பிஸியாக உள்ளார். பேட்டிங் பகுதியை தானே கவனித்துக்கொள்ள ரவி சாஸ்திரி முடிவு செய்துள்ளார். அதேபோல், பந்துவீச்சு பயிற்சிக்கு, கிரிக்கெட் ஆலோசனை குழு பரிந்துரைப்படி ஜாகீர்கானை நியமித்தது பி.சி.சி.ஐ. ஆனால், முழுநேர பயிற்சியாளர் பணிக்கு ஜாகீர்கான் தயாராக இல்லையாம். பகுதி நேரமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஆட்டத்திற்கு மட்டுமே பந்துவீச்சு பயிற்சிகளை வழங்க ஜாகீர்கான் தயாராக இருப்பதாக … Read more

பொய்வாக்குமுலம் அளித்த அனுராக் தாக்குர் மன்னிப்பு கோரினர் ………

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பிசிசிஐ முன்னாள் தலைவரான அனுராக் தாக்குர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். பிசிசிஐயை சீரமைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு பிசிசிஐ தலைவராக இருந்த அனுராக் தாக்குர் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தார். மேலும், பிசிசிஐ நிர்வாகத்தில் சிஏஜி (தலைமை கணக்கு தணிக்கை) பிரதிநிதியை நியமிப்பது, லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது ஆகியவை அதன் தன்னாட்சி அந்தஸ்தைப் பாதிக்கும் என கடிதம் அளிக்குமாறு … Read more

கிரிக்கெட்டில் சாதித்துக் காட்டிய வீர தமிழச்சி…………..

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தமிழர் என்பதே பலருக்கும் தெரியாது. காரணம், அவருடைய குடும்பம் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை. தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் – லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ஆரம்ப காலங்களில் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஆந்திராவுக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தினார். அண்ணன் விளையாடுவதை வேடிக்கைப் பார்க்க கிரிக்கெட் மைதானத்துக்குச் சென்றுகொண்டிருந்தார். காலையில் மிகவும் தாமதமாக … Read more

திலீப்புக்கு பகிரங்கமாக ஆதரவு அளிக்கும் கிரிக்கெட் நடிகர்.. கழுவி ஊற்றும் மக்கள்

திருவனந்தபுரம்: மொத்த கேரளாவும் நடிகர் திலீப்பை வறுத்தெடுத்துக் கொண்டுள்ள சூழ்நிலையில், சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், அவருக்கு ஆதரவாக பேசி எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் பிக்சிங்கில் ஈடுபட்டவர்தான் ஸ்ரீசாந்த். கேரளாவை சேர்ந்த இவரால் அம்மாநில கிரிக்கெட் உலகத்திற்கே அப்போது தலைகுனிவு ஏற்பட்டது. 2013 முதல் இவர் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதன்பிறகு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்ட ஸ்ரீசாந்த், கடந்த வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போது கேரள மாநிலமே … Read more

மேட்ச் பிக்சிங்.. தென்னாப்பிரிக்க வீரருக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடத் தடை!

ஜோகன்ஸ்பர்க்: மேட்ச் பிக்சிங் புகாரை தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 8 ஆண்டுகள் விளையாட தடை விதித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் லோன்வாபோ டிசோபே. கடந்த 2015-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரேம்ஸ்லாம் டி20 போட்டியில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தியதில் டிசோபே மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டது உறுதியானது. … Read more

கிரிக்கெட்டில் இந்தியாவின் மித்தாலிராஜ் உலக சாதனை!

பிரிஸ்டோல்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் உலக சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இதில் இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ் ஒருநாள் போட்டிகளில் அதிகளவாக … Read more

ஜெர்மனியில் மாற்று திறனாளி வீராங்கனைகளை தவிக்கவிட்ட இந்தியா

புதுடில்லி: உலக பாரா நீச்சல் தொடரில், பங்கேற்க சென்ற இந்தியாவை சேர்ந்த மாற்று திறனாளி வீரர்கள் 6 பேர் உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஓட்டலுக்கு திரும்ப பணமில்லாமல் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்து, பின்னர் அபராதம் கட்டியுள்ளனர். வேதனை: இது தொடர்பாக நாக்பூரை சேர்ந்த நீச்சல் வீராங்கனை காஞ்சன மாலா பாண்டே கூறுகையில், இது போன்ற சம்பவங்களை எதிர்கொள்வேன் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த தொடரில் கலந்து கொள்ள ரூ.5 லட்சம் … Read more

உலககோப்பையில் இந்திய அணி பேட்டிங்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது இந்தியா. இதற்கு முந்தையை போட்டியில் இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வென்றிருந்த இந்திய அணி, முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் இந்தப் போட்டியில் வெல்லும் முனைப்பில் உள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் … Read more

கங்குலி-ரவி சாஸ்திரி கடும் வாக்குவாதம்..இந்திய அணியில் பரபரப்பு

மும்பை: இந்திய அணி பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கானை நியமிப்பது தொடர்பாக சவுரவ் கங்குலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் நடுவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரவி சாஸ்திரியைவிட சேவாக்தான், இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர் என்பது கிரிக்கெட் ஆலோசனை குழு உறுப்பினர் கங்குலி கருத்து. ஆனால் அணியினரின் (கோஹ்லி) விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து ரவி சாஸ்திரியை நியமிக்க கங்குலியிடம் சக குழு உறுப்பினர் சச்சின்தான் வேண்டுகோள்விடுத்துள்ளார். சச்சின் கூறியதை தொடர்ந்து வேறு வழியில்லாமல் … Read more