யார்???? பந்துவீச்சு பயிற்சியாளர் குமிடி பிடி சண்டையில் சாஸ்த்ரி ……

யார்???? பந்துவீச்சு பயிற்சியாளர் குமிடி பிடி சண்டையில் சாஸ்த்ரி ……

Default Image
டெல்லி: இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரவி சாஸ்திரி தனது அணியின் பிற பயிற்சியாளர்கள் நியமிப்பதில் பிஸியாக உள்ளார். பேட்டிங் பகுதியை தானே கவனித்துக்கொள்ள ரவி சாஸ்திரி முடிவு செய்துள்ளார்.
அதேபோல், பந்துவீச்சு பயிற்சிக்கு, கிரிக்கெட் ஆலோசனை குழு பரிந்துரைப்படி ஜாகீர்கானை நியமித்தது பி.சி.சி.ஐ. ஆனால், முழுநேர பயிற்சியாளர் பணிக்கு ஜாகீர்கான் தயாராக இல்லையாம். பகுதி நேரமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஆட்டத்திற்கு மட்டுமே பந்துவீச்சு பயிற்சிகளை வழங்க ஜாகீர்கான் தயாராக இருப்பதாக தெரிகிறது.
இதனால், முழுநேர பந்துவீச்சு பயிற்சியாளரான பரத் அருணை தேர்வு செய்ய ரவி சாஸ்திரி பரிந்துரை செய்துள்ளாதாக தெரிகிறது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாந்தின் பெயர், அதேபோல், ஆஸி. முன்னாள் வீரர் ஜேசன் கில்லெஸ்பி ஆகியோரது பெயர்கள் அடிபட்டாலும், பரத் அருணை தேர்வு செய்ய மும்முரம் காட்டிவருகிறார் ரவி சாஸ்திரி.
பரத் அருண், ரவிசாஸ்திரியின் பால்யகால நண்பர் என்பது மட்டுமல்ல, ஆந்திராவைச் சேர்ந்த அருண் தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற வேகபந்து வீச்சாளராக இருந்தவர். ரஞ்சிக்கோப்பைக்காக பலமுறை தமிழ்நாட்டு அணியில் விளையாடு பல சாதனைகளை செய்தவர் அருண் என்கிறார்கள்.
முழுநேர பேட்ஸ்மேனாக இல்லாவிட்டாலும், கடைசியில் இறங்கினாலும், அடித்து ஆடுவதில் பரத் அருண் அந்த காலத்திலேயே புகழ்பெற்றவர் என்கிறார்கள் சென்னை கிரிகெட் கிளப் நிர்வாகி. அருண் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக 2014ல் இருந்துள்ளார்.
Join our channel google news Youtube