கனடா ஓபன் பேட்மிட்டன் : பிரணாய் தோல்வி

கனடா ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் 3-ஆவது சுற்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.கனடாவின் கல்கேரி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 3-ஆவது சுற்றில் பிரணாய் 21-17, 14-21, 13-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 9-ஆவது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் ஜியோன் ஹியோக் ஜின்னிடம் தோல்வி கண்டார்.மற்றொரு 3-ஆவது சுற்று ஆட்டத்தில் மற்றொரு இந்திய வீரரான கரண் ராஜன் 18-21, 14-21 … Read more

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இர்வின் சதம் ……….ஜிம்பாப்வே-344/8

கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்துள்ளது.ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 70 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கிரேக் இர்வின் 238 பந்துகளில் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 151 ரன்கள் குவித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இலங்கை தலைநகர் கொழும்பில் … Read more

விம்பிள்டன் டென்னிஸின் இறுதிப் போட்டியில் ஃபெடரர்!

விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில், ஸ்விட்சர்லாந்து நாட்டின் ரோஜர் ஃபெடரர், செக்குடியரசின் தாமஸ்  பெர்டிச் ஆகியோர்  மோதினர். இதில் 12-வது முறையாக ஃபெடரர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், அவர் மீது எதிர்ப்பார்ப்புகள் எகிறியிருந்தது. ஆட்டத்தின் ஆரம்பம்  முதலே ஆதிக்கம் செலுத்திய ஃபெடரர், 7-6 (7/4), 7-6 (7/4), 6-4 என்ற நேர் செட் கணக்குகளில்  வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். ஃபெடரர், விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்குள் … Read more

சிஎஸ்கே 2.0:விசில் போடு மச்சி….

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் தடைக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஐபிஎல் போட்டியில் மீண்டும் களமிறங்கவுள்ளது சிஎஸ்கே. சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய என். சீனிவாசன், ஐபிஎல் போட்டியில் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்கும் என்று கூறினார். அவர் மேலும் பேசியதாவது: நீங்கள் சிஎஸ்கே ரசிகராக இருந்தால் தோனி 2018 ஐபிஎல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் களமிறங்குவதைக் காண விரும்புவீர்கள். மஞ்சள் உடையில் அவரை … Read more

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?: நியூஸிலாந்துடன் இன்று மோதல்

பெண்கள் உலக கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில், வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா களமிறங்குகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்சில் பெண்களுக்கான 11வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘டாப்-4’ இடங்கள் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில், இங்கிலாந்து (10), ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா (10), தென் … Read more

இலங்கை அணிக்கு புதிய கேப்டன்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் திரும்பியது. இதனையடுத்து, தலைமைப்பயிற்சியாளர் பதவியிலிருந்து கிரகாம் போர்டு விலகினார். இந்நிலையில், இலங்கை வந்த ஜிம்பாப்வே அணி ஒரு நாள் தொடரை 3-2 என கைப்பற்றியது. இந்த அதிர்ச்சியில், மூன்றுவிதமான போட்டிக்கான கேப்டன் பதவியிலிருந்து மாத்யூஸ் விலகினார். நேற்று இலங்கை டெஸ்ட் கேப்டனாக சண்டிமால், ஒரு நாள் மற்றும் ‘டுவென்டி-20’ கேப்டனாக உபுல் தரங்கா நியமிக்கப்பட்டனர். இது குறித்து மாத்யூஸ் கூறுகையில்,” கேப்டன் பதவியிலிருந்து விலகுவதற்கு இதுதான் … Read more

உலகின் அடுத்த கிராண்ட் மாஸ்டராக வலம்வர போகும் இந்தியாவின் அரிகிருஷ்ணா ……..!

ஜெனீவா :ஜெனீவாவில் நடைபெறும் ஜெனீவா  ஃபிடே கிராண்ட்ப்ரீ செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் உலகின் 4-ஆம் நிலை வீரை வீழ்த்தி இந்தியாவின் அரிகிருஷ்ணா ஏழாவது சுற்றுக்கு முன்னேறினார். ஜெனீவா ஃபிடே கிராண்ட்ப்ரீ செஸ் போட்டி ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற 6-ஆவது சுற்றில் அரிகிருஷ்ணாவும், உலகின் 4-ஆம் நிலை வீரரான ஆர்மேனியாவின் ஆரோனியனும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் அபாரமாக ஆடினாலும், ஒருக் கட்டத்தில் அரிகிருஷ்ணா ஆட்டத்தை … Read more

இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா இன்று மோதல்; பதிலடி கொடுக்குமா தென் ஆப்பிரிக்கா?.

இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது. முதல் டெஸ்டில் 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப் பெற்றது இங்கிலாந்து அணி. அந்த வெற்றிக் களிப்போடு இந்தப் போட்டியிலும் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்கும். அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியிலிருந்து மீள வேண்டும் என்ற வைராக்கியத்தோடு களம் காணும். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் இருக்காது. அதேநேரத்தில் தென் ஆப்பிரிக்க அணியில் … Read more

இந்திய அணியின் முழுநேர பயிற்சியாளராக ஜாகிர்கான் கிடையாது : பிசிசிஐ விளக்கம்

மும்பை: இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜாகீர்கான் முழுநேர பயிற்சியாளர் அல்ல என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. கேப்டன் கோலியுடனான மோதலால் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ளே ராஜினாமா செய்தார். இதையடுத்து பலத்த போட்டிக்கிடையே இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். மேலும் டிராவிட் பேட்டிங் பயிற்சியாளராகவும், ஜாகீர் கான் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜாகீர்கான் முழுநேர பயிற்சியாளர் அல்ல என்று பிசிசிஐ .கூறியுள்ளது. வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக … Read more

மும்பை இந்தியன்ஸ் அணியின் லோகோவை மல்யுத்த சாம்பியன் பெல்ட்டில் ஒட்டி அனுப்பிய Triple H

கலிபோர்னியா: ஐ.பி.எல் பத்தாவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு WWE சூப்பர் ஸ்டார் Triple H சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் பத்தாவது சீசனின் இறுதி போட்டியில் புனே அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றதை தொடர்ந்து மும்பை அணிக்கு வாழ்த்து கூறிய WWE … Read more