கோவிஷீல்ட் தடுப்பூசி அரசுக்கு ரூ.200, தனியாருக்கு ரூ.1000 – ஆதார் பூனவல்லா

கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, இந்திய அரசுக்கு ஒரு டோஸுக்கு ரூ.200 க்கு விற்கப்படும் என்று எஸ்ஐஐ தலைவர் ஆதார் பூனவல்லா கூறியுள்ளார். ஆக்ஸ்போர்டு மற்றும் பூனே சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, இந்திய அரசுக்கு ஒரு டோஸுக்கு ரூ.200 க்கு விற்கப்படும் என்றும் தனியாரில் வாங்குபவர்களுக்கு, ஒரு டோஸுக்கு ரூ.1,000 விலைக்கு விற்கப்படும் எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். … Read more

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த சீரம் நிறுவனத்தின் கோரிக்கை இன்று பரிசீலிக்கப்படுகிறது.!

கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு ஒப்புதலுக்கான சீரம் நிறுவனத்தின் கோரிக்கை இன்று பரிசீலிக்கப்பட உள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்கான விண்ணப்பம் இன்று நிபுணர் குழுவால் பரிசீலிக்கப்படும். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்ட் என பெயரிடப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகரிக்க இங்கிலாந்து அரசு மருந்துகள் மற்றும் சுகாதார ஒழுங்குமுறை அமைப்பின் (எம்.எச்.ஆர்.ஏ) அவசரகால பயன்பாட்டு ஒப்புதலை வழங்கியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சீரம் நிறுவனம் இந்தியாவில் கோவிஷீல்டுக்கான சோதனைகளை … Read more

கொரோனா தடுப்பூசி தயாரா? – பிரதமர் மோடி இன்று ஆய்வு.!

கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் மேம்பாடு குறித்து 3 இடங்களில் இன்று பிரதமர் மோடிஆய்வு செய்கிறார். கொரோனா வைரஸ் தடுப்பூசிகளின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி  இன்று மூன்று நகர சுற்று பயணத்தை மேற்கொள்கிறார். அந்தவகையில், பிரதமர் அகமதாபாத்தில் உள்ள சைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவற்றை பார்வையிடுகிறார். இந்நிலையில், மோடி ஹக்கீம்பேட்டை … Read more

நாசி கொரோனா தடுப்பூசி சோதனை விரைவில் தொடங்கும் இரண்டு நிறுவனம் – ஹர்ஷ் வர்தன்

இந்தியாவில் நாசி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் சில மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களும் மருந்துக்கான ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்றவுடன் நாசி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் ஹர்ஷா வர்தன் கூறுகையில், தாமதமாக நடைபெரும் சோதனையில் பொதுவாக ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் உள்ளனர் … Read more