அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சென்ற விமானம் பழுது…! அவசர அவசரமாக தரையிறக்கம்….!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சென்ற முதல் சர்வதேச பயணம். தொழிநுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று முதன்முறையாக கௌதமாலாவுக்கு நேற்று மதியம் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இவர் தனி விமானத்தின் மூலம் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார். இதனையடுத்து, அவர் சென்ற விமானத்தில் திடீரென தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, வாஷிங்டனில் உள்ள, ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கமலா ஹாரிஸ் … Read more

சென்னை மெட்ரோ நிலையங்களில் பயணசீட்டு வழங்கும் இயந்திரம் பழுது! இலவசப் பயணத்தால் மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண சீட்டு வழங்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இன்று காலை 6 மணியளவில், பயணசீட்டு வழங்கும் இயந்திரத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்  பயணிகளுக்கு, இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறையும் சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.