இலங்கை அகதிகள் இந்தியாலிருந்து இலங்கைக்கு அனுப்பபடுவர்.. இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் கருத்து..

இலங்கை அகதிகள் பாதுகாப்பாக தங்கள் தாய்நாடு திரும்ப நடவடிக்கை. இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் அறிவிப்பு. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தணா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து இருதரப்பு குறித்து பேச்சு நடத்தினர்.  இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.இதில்,  தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள 3000 இலங்கை அகதிகளை அவர்களின் தாய்நாடான இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,அவர்களின் … Read more

மத்திய அரசின் உயரிய பாதுகாப்பு வாபஸ்..முன்னால் முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு ஷாக் கொடுக்கும் சம்பவம்..

தமிழக அரசியலில் முக்கியமானவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பை வழங்கி வருகிறது, இந்நிலையில்,தமிழக தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ். இந்த படை இவர்களின் பாதுகாப்பை உரிய முறையில் திட்டம் வகுத்து பாதுகாக்கிறது. இந்நிலையில் இவர்களின் இந்த பாதுகாப்பை மத்திய அரசு தற்போது ஒவ்வொருவராக திரும்பப்பெற்று வருகிறது. இதில் முன்னால் பிரதமரும் விலக்கல்ல. இந்த வகையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவர் மற்றும்  தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் இந்த வகை … Read more

நெல்லை கண்ணன் கைது ஏன்.. விளக்கம் அளித்த எடப்பாடி… வீருகொண்டு எழுந்த எதிர்கட்சி…

தமிழ்நாடு  சட்டபேரவையின்  இந்த ஆண்டுக்கான  முதல் கூட்டம் நேற்று ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித் உரையுடன்  தொடங்கியது. குடியுரிமை விவகார கைது குறித்து விளக்கம் அளித்த முதல்வர்.      இந்நிலையில்  சட்டபேரவையின் இரண்டவது நாள் கூட்டம் இன்று தொடங்கியது.  இதில், பட்டிமன்றபேச்சாளர் நெல்லை கண்ணன் கைது குறித்து காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார், அதில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டரீதியாக தான்  … Read more

ஜெயலலிதா செய்தது சரி என்றால் நான் செய்ததும் சரியே.. ஆளுநர் உரை நகலை கிழிப்பு விவகாரத்தில் அன்பழகன் அதிரடி..

இன்று தமிழக சட்டமன்றத்தில்  ஆளுநர் உரை மீதான விவாதத்தில், உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுக கட்சி ஆட்சியில் சிறப்பாக நடந்தது என்று பேசினர். இந்நிலையில், இது குறித்து ,திமுக சார்பில் கருத்து கூறிய ஜெ.அன்பழகன், பதில் அளித்து பேசுகிறபோது, இந்த தேர்தலில் நடந்த  முறைகேடுகளை பட்டியலிட்டு பேசினார். மேலும், சபாநாயகரிடம் சென்று, அவர், தயாரித்த குறிப்புகளைக் காட்டி, மேலும்,  5 நிமிடங்கள் ஆளுநர் உரை மீது பேச வாய்ப்பளிக்கவேண்டும் எனக் கேட்டார்.ஆனால் சபாநாயகர்  அனுமதி வழங்காமல், பேசக்கூடாது … Read more

ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியை தலைகீழாக தொங்கவிட்டு அவரது தாடியை எடுப்பேன் என பாஜ., எம்பி எல்லைமீறி பேச்சு…

தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தெலுங்கானா மாநிலம்  ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி எம்.பி.,யான அர்விந்த்  கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் கூறியதாவது,  ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பாக  ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் சகோதரரை, உங்கள் சமூகத்தை சேர்ந்த கயவர்களாலே பல முறை குத்தப்பட்டு, துப்பாக்கியால்  சுடப்பட்டார். இதற்காக இப்போது வரை உங்கள் சகோதரர் சிகிச்சை பெற்று வருகிறார். அப்படி … Read more

சூடானில் தமிழகத்தை சேர்ந்த மூன்று இந்தியர்கள் உயிரிழப்பு.. தமிழக அரசு சார்பில் இரங்கல் மற்றும் நிதியுதவி..

தொழிற்சாலையில் பணியில் ஈடுபடும் போது பயங்கர தீ விபத்து. மூவர் உயிரிழப்பிற்க்கு தமிழக அரசு சார்பில் இரங்கல் மற்றும் நிதியுதவி. இந்தியர்களில் அதிலும் குறிப்பாக வேலை தேடி அயல் நாடுகளுக்கு செல்லும் மக்களில் பெரும்பாரும் தமிழகத்தை சார்ந்தவர்கள் ஆவர். அந்தவகையில்   ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள  சூடான் நாட்டில் உள்ள “சீல செராமிக்ஸ்” என்ற நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பலரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்  கடந்த  டிசம்பர் 03ம் தேதி ‘சீலா செராமிக்’ என்ற தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர  தீ … Read more

டெல்லியில் இன்று பிரதமர் மோடியை கொல்ல பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி.. உளவுத்துறை பரபரப்பு எச்சரிக்கை…

பிரதமரின் பேரணியில் பாக்கிஸ்தான் தீவிரவாத தாக்குதல் சதி. உளவுத்துறையின் பதறவைக்கும் எச்சரிக்கை. தலைநகர் டெல்லியில் இன்று இந்திய பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள பேரணியில் திடீர் தாக்குதல் நடத்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது என்ற  தீவிரவாத அமைப்பு சதி செய்துள்ளதாக தற்போது தகவல் தெரியவந்துள்ளது. மத்திய அரசு விரைவில் முறைப்படுத்தப்படாத குடியிருப்புகளை முறைப்படுத்துவது தொடர்பாக புதிய முடிவெடுக்கவுள்ளது. இதுதொடர்பான விளக்கப் பேரணியானது டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடி தலைமையில்,  மத்திய அமைச்சர்கள், … Read more

ஜார்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியை இழந்த பாஜக.. கருத்துகணிப்பு முடிவுகளால் பாஜகவினரிடையே பெரும் பீதி ..

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்  கூட்டணி கட்சிகள் ஆட்சியமைக்கும் எனத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த தேர்தல் பஜக கட்சிக்கு பெரும்  பின்னடைவு இதன் படி  ஜார்க்கண்ட்  மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஐந்து  கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.கடந்த  நவம்பர் மாதம்  30ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு  நடைபெற்ற நிலையில், கடைசி மற்றும் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன்  நிறைவடைந்தது. இந்த  இறுதிக்கட்ட தேர்தலில் 71 சதவீத வாக்குகள் … Read more

தேசிய குடியுரிமை திருத்த மசோதா எதிரொலி…!!! சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம்…!!!

நாட்டில் தேசிய குடியுரிமை திருத்த மசோதா அறிமுகமாகி நாட்டையே உலுக்கி வருகிறது. இந்நிலையில்வட கிழக்கு சகோதரிகள் ஒற்றுமையாக இந்த திருத்தத்தை எதிர்த்து வரும் நிலையில், சென்னையிலும் போராட்டம். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தேசிய  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட அசாம் இளைஞர்கள் ஒரே இடத்தில் ஒன்றாக கூடி  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த செய்தி தற்போது தமிழகத்தையே உற்றுநோக்க … Read more

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உடன் பிறப்புகளிடமே 10 இலட்சம் கேட்ட திமுக மா.தலைமை.!!! புகார் கடிதம் இணையத்தில் வெளியாகி அம்பலம்..!!!

தற்போது உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்காக  வேட்பு மனு தாக்கல் நடைபெற்றுவருகிறது. தற்போது ஆண்ட கட்சியில் பல லட்சம் கேட்டு வசமாக மாட்டிக்கொண்ட அவலம். இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்கிய தமிழகத்தினை ஆண்ட  கட்சி  நடக்க இருக்கும் ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு அந்த கட்சி சார்பில்  போட்டியிட தேர்தல் செலவுகளுக்கு மற்றும் மேற்படி செலவுகளுக்கு என மொத்தம்   ரூ 10,00,000/-. முதல் ரூ 15,00,000/-.  வரை வைத்திருப்பவர்களுக்கு  மட்டுமே சீட் வழங்குவதக  சலசலப்பாக பேசப்பட்டு … Read more