ஜார்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியை இழந்த பாஜக.. கருத்துகணிப்பு முடிவுகளால் பாஜகவினரிடையே பெரும் பீதி ..

  • இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில், நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்  கூட்டணி கட்சிகள் ஆட்சியமைக்கும் எனத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
  • இந்த தேர்தல் பஜக கட்சிக்கு பெரும்  பின்னடைவு

இதன் படி  ஜார்க்கண்ட்  மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஐந்து  கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது.கடந்த  நவம்பர் மாதம்  30ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு  நடைபெற்ற நிலையில், கடைசி மற்றும் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நேற்றுடன்  நிறைவடைந்தது. இந்த  இறுதிக்கட்ட தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலின்  வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகள் வரும் 23ம் தேதி திங்கள்கிழமை  வெளியாக உள்ளன.இந்நிலையில், தற்போதைய  கருத்துக் கணிப்புப்படி பெரும்பாலான கருத்துகணிப்பு  முடிவுகள் பாஜகவுக்கு  இறங்குமுகமாகவே  உள்ளது.ஏற்க்கனவே, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும்  சட்டீஸ்கரை தொடர்ந்து  மகாராஷ்டிராவில் ஆட்சியை பறிகொடுத்து  பாஜக, இந்நிலையில்  தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஆட்சியை  பறிகொடுக்கும் நிலைக்குத் தற்போது  தள்ளப்படுமா என்பது கூடிய விரைவில் அதாவது  நாளை மறுநாள் வாக்கு  எண்ணிக்கையின் போது  தெரிந்துவிடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

author avatar
Kaliraj