சூடானில் தமிழகத்தை சேர்ந்த மூன்று இந்தியர்கள் உயிரிழப்பு.. தமிழக அரசு சார்பில் இரங்கல் மற்றும் நிதியுதவி..

  • தொழிற்சாலையில் பணியில் ஈடுபடும் போது பயங்கர தீ விபத்து.
  • மூவர் உயிரிழப்பிற்க்கு தமிழக அரசு சார்பில் இரங்கல் மற்றும் நிதியுதவி.

இந்தியர்களில் அதிலும் குறிப்பாக வேலை தேடி அயல் நாடுகளுக்கு செல்லும் மக்களில் பெரும்பாரும் தமிழகத்தை சார்ந்தவர்கள் ஆவர். அந்தவகையில்   ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள  சூடான் நாட்டில் உள்ள “சீல செராமிக்ஸ்” என்ற நிறுவனத்தில் தமிழகத்தை சேர்ந்த பலரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்  கடந்த  டிசம்பர் 03ம் தேதி ‘சீலா செராமிக்’ என்ற தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர  தீ விபத்தில் சிக்கி அங்கு பணியில் இருந்த  3 தமிழர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த உயிரிழப்பிற்க்கு தமிழக அரசின் சார்பில்  வருத்தமும் நிதி உதவியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத்திற்க்கு  தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நிதியுதவி  முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Kaliraj