பாஜக தலைவர் ஆகிறாரா து.குப்புராமு…????யார் இவர்-!!

  • தமிழக பாஜக தலைவராக ராமநாதபுரத்தை சேர்ந்த து.குப்புராமு என்பவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்
  • பாஜக மாநில அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தமிழக பாஜக தலைவராக, ராமநாதபுரத்தை சேர்ந்த து.குப்புராமு என்பவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.தமிழக பாஜக முன்னாள் தலைவராக பதவி வகித்த திருமதி தமிழிசை சவுந்தராஜன் ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் இதனால் தமிழக பாஜக தலைவர்க்கான பதவி காலியானது.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக கணிசமான வெற்றி வாகை சூடியது.தற்பொழுது பாஜக மாநில அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது இந்த கூட்டத்தில் எச் ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், டெல்லி பிரதிநிதிகள் நரசிம்மராவ்,வானதி சீனிவாசன், சிவப்பிரகாஷ் உள்ளிட்ட 25 பேர் பங்கேற்று உள்ளனர்.ஆலோசனைக் கூட்டத்தில் து.குப்புராமு பாஜகவின் புதிய தலைவராக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று தெரிகிறது

சரி யார் இந்த து.குப்புராமு:

ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவர்  1986 முதல் 2006 வரை பட்டினம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார் மேலும் பாஜக துணைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.  பின்னர் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுகவின் அன்வர் ராஜாவை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்டவர் து.குப்புராமு என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha