மீண்டும் இந்திய ராணுவம் சர்ஜிகல் ஸ்டைரக் தாக்குதலா..?

உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்திருப்பதாகவும், அது என்னவென்று தற்போதைக்கு கூற முடியாது என்றும் தெரிவித்தார். எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். ராஜ்நாத்சிங்கின் இந்த பேச்சு, பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது ‘சர்ஜிகல் ஸ்டைரக் ‘ நடத்தப்பட்டது என்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் உள்ளது. DINASUVADU 

ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும்..!!-ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை..!!

இந்தியா அமைதியை விரும்புவதால், ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை  பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு-காஷ்மீரிலும், இந்திய எல்லையிலும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். அப்பகுதிகளில் அமைதி நிலவுவது தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தால் ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் … Read more