ஓமைக்ரான் அச்சுறுத்தல் – பள்ளிகளை மூட முதலமைச்சர் உத்தரவு!

ஓமைக்ரான் பரவல் காரணமாக பள்ளிகளை மீண்டும் மூட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு. ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக மீண்டும் டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை மூட அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். பேருந்து, மெட்ரோ ரயில்களில் 50 சதவீதம் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று, உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள், கேளிக்கை பூங்காக்கள் மீண்டும் மூடவும் மற்றும் அனைத்து விதமான கொண்டாட்டங்களுக்கு தடை எனவும் அறிவித்துள்ளார். … Read more

கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் ஜன.31 வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக கொரோனா கட்டுப்பாடு விதிகளை ஜனவரி 31 வரை நீடித்து மத்திய அரசு உத்தரவு. கொரோனா கட்டுப்பாடு விதிகளை ஜனவரி 31 வரை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் டிசம்பர் 31-ஆம் தேதி நிறைவடைவதால், ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜனவரி 31 வரை நீட்டிக்கப்டுகிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் … Read more

கர்நாடகாவில் புதிதாக 5 பேருக்கு ஒமிக்ரான் – சுகாதாரத்துறை அமைச்சர்!

கர்நாடகாவில் புதிதாக 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தகவல். கர்நாடகாவில் புதிதாக நேற்று 5 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடகா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 5 பேருமே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளத்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர். மேலும், வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் … Read more