நிவின் பாலிக்கு ஜோடியான அருவி பட நாயகி அதிதி பாலன்! படவெட்டு அப்டேட்!

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் அருவி. இந்தபடத்தில் அதிதி பாலன் அறிமுகம் ஆகியிருந்தார். முதல் படத்திலேயே நல்ல நடிகை என்ற பெயர் பெற்றார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்காமல் காத்திருந்தார். அவ்வப்போது ஸ்டைலான போட்டோக்கள் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ‘பிரேமம்’ நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்திற்கு படவெட்டு … Read more

நயன்தாரா – நிவின் பாலி நடிப்பில் உருவாகிவரும் புதிய மலையாளப் படத்தின் கலக்கல் டீசர் இதோ!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயினாக உள்ளார். அவர் தற்போது மலையாளத்தில் இளம் நடிகரான பகத் பாசிலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு லவ் ஆக்ஷன் டிராமா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இந்த படத்தினை என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர், இப்படம்  ஒரு கலகலப்பான ஆக்ஷன் நிறைந்த ஒரு காதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்க வைக்கிறது. இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி … Read more

பழைய வண்ணார பேட்ட ஹீரோ நயன்தாராவுக்கு வில்லனா?

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.இவர் நடித்து சமீபத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை. இவர் நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன.இந்நிலையில் இவர் மலையாளத்தில் நிவின் பாலியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். ஓணம் பண்டிகைக்கு வெளியிடுவதற்காக மலையாள நடிகர் தயான் சீனிவாசன் என்பவர் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தில் சின்ன தம்பி சீரியலில் கதாநாயகனாக நடித்த பிரஜின் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் இவர் … Read more

‘பேரன்பு’க்காக மம்முட்டியை மனதார பாராட்டிய நிவின் பாலி!!

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற தரமான படங்களை இயக்கிய ராம், அடுத்ததாக மம்முட்டியை கதாநாயகனாக வைத்து ‘பேரன்பு’ எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்த படத்தில் தங்க மீன்கள் சாதனா, அஞ்சலி ஆகியோரும்  நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. இந்த படம் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தினை மலையாள முன்னனி … Read more

‘பிரேமம்’ நிவின்பாலியின் மிரட்டும் நடிப்பில் ‘மைக்கேல்’ பட டீசர்!!!

பிரேமம் படம் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. இவர் தமிழிலும், நேரம், ரிச்சி என இரண்டு படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார். மலையாளத்தில் ரசிகர் பட்டாளத்தை வைத்து முன்னனி நடிகராக உள்ள நிவின்.பாலி தற்போது மைக்கேல் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ள நிலையில், இப்பட டீசர் தற்போது வெளியாகியுள்ளது. DINASUVADU