மேகதாதுவில் அணை கட்ட பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார் – தமிழக பாஜக தலைவர்

மேகதாதுவில் அணை கட்ட பிரதமர் மோடி அனுமதிக்க மாட்டார். சமீப நாட்களாக கர்நாடகாவில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வராக இருந்த எடியூரப்பா அவர்கள், மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக இருந்தார். அதன்படியே, தற்போதும் முதல்வராக பொறுபேற்றுள்ள பசவராஜ் பொம்மை அவர்களும் மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளார். இந்நிலையில், சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். … Read more

மேகதாதுவில் அணை கட்டும் பணியை விரைவில் தொடங்குவோம் – கர்நாடகா முதல்வர்

தமிழக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று  வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து … Read more

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை அனைத்து கட்சி கூட்டம்…!

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10:30 மணி அளவில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும், இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து  விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் 13 கட்சிகள் கலந்து கொள்கின்றன. தமிழக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் … Read more

ஓடுகின்ற நதியெல்லாம் தனக்கே சொந்தமென்று சொல்ல கூடாது – அமைச்சர் துரைமுருகன்

மாநிலங்களில் ஓடுகின்ற நதியெல்லாம் தனக்கே சொந்தமென்று சொல்ல கூடாது என்ற விதி இருக்கிறது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி பயணத்தை முடித்து, தமிழ்நாடு திருப்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கர்நாடகா அரசு நாங்கள் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று இருக்கிறார்கள். மாநிலங்களில் ஓடுகின்ற நதியெல்லாம் தனக்கே சொந்தமென்று சொல்ல கூடாது என்ற விதி இருக்கிறது என கூறியுள்ளார். … Read more