இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டப்பேரவை அனைத்து கட்சி கூட்டம்…!

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10:30 மணி அளவில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும், இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து  விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் 13 கட்சிகள் கலந்து கொள்கின்றன.

தமிழக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கர்நாடக அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்று  வலியுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக பேசினார். இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த சட்டப் பேரவைக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில், முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.