#BREAKING: முதலில் எம்.எல்ஏவாக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார்..!

முதல்வருக்கு தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்று கலைவாணர் அரங்கில் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியை ஏற்றுக்கவுள்ளனர். இவர்களுக்கு பதவி ஏற்றுக் கொள்ள தற்காலிக சபாநாயகராக திமுகவை சேர்ந்த கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற பேரவை உறுப்பினர் கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டு  தற்காலிக சபாநாயகராக ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், கலைவாணர் அரங்கில் நடைபெறும் முதல் கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். முதல்வருக்கு தற்காலிக … Read more

#BREAKING: தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்..!

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார். திங்கள்கிழமை காலை ஆளுநர் மாளிகையில் கு.பிச்சாண்டி பதவியேற்க உள்ளார். செவ்வாயன்று தொடங்க உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள கு.பிச்சாண்டி ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.