வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம் – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  வடக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது. எனவே, வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  கடலோர ஆந்திராவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். வடக்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. வரும் செப்டம்பர் 6-ம் தேதி  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் காரணமாக வரும் செப்டம்பர் 6, 7 தேதிகளில் தென் இந்தியாவின் பல்வேறு பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் வங்கக்கடலுக் … Read more

டெல்லி: வார இறுதியில் கனமழைக்கு வாய்ப்பு..!ஐ.எம்.டி அறிவிப்பு..!

டெல்லியில் வார இறுதி நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்த இந்திய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, டெல்லியில் வரும் வியாழக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 30  மற்றும் 31 ஆகிய நாட்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இது வார இறுதி நாட்களில் தீவிர மழையாக மாற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.  மேலும், இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான மழை அளவு இன்னும் … Read more

கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை..!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இந்தியாவிற்கு அதிகளவு பலன் தரக்கூடிய தென்மேற்கு பருவமழை கேரளாவில் தெற்கு பகுதியில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழை வருகின்ற செம்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும், கேரளாவில் உள்ள தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழையால் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் பயன் அடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தொடங்கியுள்ள பருவ மழை கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட … Read more

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்யும் – வானிலை மையம்..!!

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த வருடம் தாமதமாக இரண்டு நாட்கள் கழித்து தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில் ” இந்த ஆண்டு … Read more

#BeAlert: மார்ச் முதல் மே வரை வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்- ஐஎம்டி

டெல்லி:மார்ச் மதமானது வானிலை மாற்றத்துடன் தொடங்கியுள்ளது.இதுகுறித்த தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது. வடக்கு, வடகிழக்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்.மார்ச் முதல் மே வரையிலான கோடைகால முன்னறிவிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய இந்தியாவில் வெப்பநிலை சாதாரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வடக்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் துணைப்பிரிவுகளில் வெப்பநிலை, மத்திய இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு … Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல். குமரிக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கைக் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்து வரும் இரு தினங்களைப் பொறுத்தவரையில் தென் தமிழகம் … Read more

12 நாட்கள் கழித்து பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்

12 நாட்கள் கழித்து பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் பருவமழை மீண்டும் தொடங்கவுள்ளது. மேற்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபின் சில பகுதிகளிலிருந்து தென்மேற்கு பருவமழை திரும்பப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அடுத்த இரண்டு நாட்களில், வட இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை பின்வாங்க வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலிருந்து தென்மேற்கு பருவமழை மேலும் திரும்ப … Read more

டெல்லியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த அளவில் பதிவான மழை.!

டெல்லியில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த அளவில் இந்த மாதம் பதிவான மழை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செப்டம்பர் மாதத்தில் 21 மி.மீ க்கும் குறைவாக மழை  பதிவாகியுள்ளது. இது 16 ஆண்டுகளில் மிகக் குறைவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் வெறும் 20.9 மிமீ மழையை மட்டுமே பதிவு செய்துள்ளதாக ஐஎம்டி தரவு தெரிவிக்கிறது. மேலும், டெல்லியில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 237 மி.மீ … Read more

டெல்லியில் 13 நாட்கள் கழித்து லேசான மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் 

டெல்லியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரத்தில் 13 நாட்களாக மழைப் பெய்யவில்லை என்றும் கடைசியாக செப்டம்பர் 8 அன்று  1.3 மி.மீ மழை பெய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 36.8 டிகிரி செல்சியஸில் பதிவாகியுள்ளது. இதனால், இன்று மற்றும் நாளை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது … Read more