இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்யும் – வானிலை மையம்..!!

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால் இந்த வருடம் தாமதமாக இரண்டு நாட்கள் கழித்து தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில் ” இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், இயல்பான அளவில் பெய்யும். அதாவது 96 சதவீதம் முதல் 104 சதவீதம் வரை மழை பெய்யும்.

இதில் , 4 % கூடுதலாகவோ குறைவாகவோ இருக்க வாய்ப்புள்ளது. மேலும் வடமேற்கு இந்தியாவில் இந்த தென்மேற்கு பருவ மழை மூலம் இயல்பாக 92 முதல் 108 சதவீதம் வரை பெய்ய வேண்டும். தென் பகுதியில் 93 சதவீதம் முதல் 107 சதவீதம் வரை பெய்யும் ” என்றும் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.