சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து…! பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஈபிஎஸ் …!

சிபிஎஸ்இ +2 தேர்வை ரத்து செய்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த ஈபிஎஸ். 

கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன்-1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.

இதையெடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கொரோனா சூழலில் மாணவர்கள் நலன் கருதி சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மாணவர்களின் உடல் நிலை மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கான மதிப்பெண் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி  பழனிசாமி நன்றி தெரிவித்து ட்வீட்டர் செய்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.