வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையம்.!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

கடலோர ஆந்திராவில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். வடக்கு மத்திய வங்கக் கடல் பகுதிகளில் 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது.

வரும் செப்டம்பர் 6-ம் தேதி  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் காரணமாக வரும் செப்டம்பர் 6, 7 தேதிகளில் தென் இந்தியாவின் பல்வேறு பகுதியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் வங்கக்கடலுக் மீன்வர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.