சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு “வாடிவாசல்”அப்டேட்..! அதிரவைக்க வருகிறது சில நிமிட காட்சிகள்….

தமிழ் சினிமா ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக காத்துள்ள திரைப்படம் என்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள “வாடிவாசல்” திரைப்படம் தான். இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்றை அமைத்து அங்கு சில … Read more

பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கிய “சியான் 61” படக்குழு.!

விக்ரம் நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான “மகான்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக கோப்ரா படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைபோல் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து விக்ரம் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அட்டகத்தி , மெட்ராஸ், சர்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் … Read more

ஆக்சன் ஹீரோ ஜி.வி.பிரகாஷிற்காக இடி முழக்கமிட தயாரான சீனு ராமசாமி..!

ஜிவி பிரகாஷ் – சீனு ராம சாமி இணையும் படத்திற்கு இடிமுழக்கம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது. இதில் மாமனிதன் திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரை நாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த … Read more

பூஜையுடன் தொடங்கியது ஜிவி பிரகாஷின் அடுத்த படம்.

இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கியது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான … Read more

தலைவி திரைப்படத்தின் தாறுமாறான புதிய அப்டேட்..!!

தலைவி திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தலைவி. திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் . விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .இந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி … Read more

தலைவி திரைப்படத்தின் அடுத்த அப்டேட்..!!

தலைவி படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார் . விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் தயாரிப்பில் உருவாகும் ‘தலைவி’ திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார் .மேலும் இந்த திரைப்படத்துக்கு பாகுபலி பட கதாசிரியரான கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார் … Read more

பிகில் பட நடிகைக்கு ஜோடியாக நடித்து வரும் ஜி.வி.! வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.!

ஜிவி பிரகாஷ் மற்றும் அம்ருதா அய்யர் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் ,அடங்காதே,ஜெயில் உள்ளிட்ட படங்கள் ரீலீஸ்க்கு தயாராகி உள்ளது . மேலும் 4g, காதலிக்க யாருமில்லை, காதலை தேடி, நித்யானந்தா, பேச்சுலர் ஆகிய படங்களில் நடித்து வருவதுடன் தனுஷின் D43 உள்ளிட்ட ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். … Read more

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படம்.! டைட்டில் என்ன தெரியுமா.?

ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு கள்வன் என்று பெயரிடப்பட்டு இன்று முதல் அதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . சமீபத்தில் இவர் இசையமைப்பில் வெளியான சூரரை போற்று படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது .மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் ,அடங்காதே,ஜெயில் உள்ளிட்ட படங்கள் ரீலீஸ்க்கு தயாராகி உள்ளது . இந்த நிலையில் தற்போது இவர் நடிக்கும் அடுத்த படத்தினை குறித்த … Read more

பூஜையுடன் ஆரம்பமான நடிகர் கார்த்தியின் அடுத்த படம்.! இயக்குனர் யார் தெரியுமா.!

நடிகர் கார்த்தியின் அடுத்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கவுள்ளார். நடிகர் கார்த்தி தற்போது ரஷ்மிகா மந்தானாவுடன் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்புகள் முடிவடைந்த இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த படத்தினை பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது . மேலும் இவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார் . இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.கார்த்தியின் அடுத்த படத்தை … Read more