பட்டமளிப்பு விழா மேடையிலும் அரசியல் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம்

எண்ணிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தாமல் தரத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம். அண்ணா பட்டமளிப்பு விழா மேடையிலும் அரசியல் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சில கருத்துக்களை முன்வைத்தார். அதை தெளிவுபடுத்த வேண்டியது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கடமையாக கருதுகிறோம். தமிழகத்தில் உயர்கல்வி … Read more

தமிழை பிற மாநிலங்களுக்கு பரப்ப வேண்டும் – ஆளுநர்

தமிழ் மொழியை பிறமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை. சென்னை பல்கலைக்கழகத்தின் 164-ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, சென்னை பல்கலைக்கழகம் பழமையானது மட்டுமல்ல, பெரும் சிறப்பு வாய்ந்தவையாகும். நாட்டின் அனைத்து துறைகளிலும் புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக்கழகம். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் நோபல் பரிசை பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள். சென்னை பல்கலைக்கழகத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க ஆசிரியர்களும், இதர ஊழியர்களும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார். … Read more

மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் – பட்டமளிப்பு விழாவில் முதல்வர் உரை!

எனது தலைமையிலான ஆட்சிக்காலம் உயர் கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும் என முதலமைச்சர் நம்பிக்கை. சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் 164-ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி முன்னிலையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கியது தான் சென்னை பல்கலைக்கழகம். ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படுகின்றன. உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கி கணக்கில் செலுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அனைத்து … Read more

கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கே நீட் – அமைச்சர் பொன்முடி

தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் பயன்படுகின்றன என அமைச்சர் பேச்சு. சென்னை பல்கலைக்கழக 164-ஆவது பட்டமளிப்பு விழா நூற்றாண்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக துணை வேந்தராக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறும் விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் பிஎச்டி மற்றும் ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள் உள்பட 712 பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நீட் போன்ற … Read more