#Election2021: நாளை தேர்தல்.. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்!

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் அந்தந்த தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இந்த தேர்தலில் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 7 மணிவரை நடைபெறும். இந்த தேர்தலில் 3,08,38,473 ஆண் வாக்காளர்களும், 3,18,28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6,26,67,200 பேர் வாக்களிக்கவுள்ளனர். இந்த தேர்தலில் … Read more

தொடங்கியது வாக்குப்பதிவு.. ஆர்வமாக தபால் வாக்கு செலுத்தும் காவலர்கள்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் உட்பட இதர பணியாளர்களுக்கு இன்று முதல் தபால் வாக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனைதொடர்ந்து அமைதி முறையில் தேர்தல் நடைபெறவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கு போலீசார், துணை ராணுவத்தினர் ஈடுபடவுள்ளார். இந்நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு … Read more

#ElectionBreaking: முதற்கட்ட வாக்குப்பதிவு தீவிரம்.. மேற்குவங்கத்தில் 55.27 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்குவங்கம், அசாம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நண்பகல் 3 மணி நிலவரப்படி அசாமில் 47.10 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 55.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள 30 தொகுதிகளில் மொத்தமாக 191 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர். இந்த தேர்தலில் 73 லட்சத்துக்கும் … Read more

#ElectionBreaking: 1 மணி நிலவரப்படி மேற்குவங்கத்தில் 40.73 சதவீத வாக்குகள் பதிவு!

மேற்குவங்கம், அசாம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி அசாமில் 37.06 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 40.73 சதவீத வாக்குகள் பதிவானது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள 30 தொகுதிகளில் மொத்தமாக 191 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர். இந்த தேர்தலில் 73 லட்சத்துக்கும் மேற்பட்ட … Read more

#Election Breaking: அமமுக – தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை?

அமமுக – தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும், தேமுதிகவிற்கு 50 முதல் 55 இடங்கள் வரை ஒதுக்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதை தொடர்ந்து அமமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் விரைவில் அமமுக- தேமுதிகவுடன் கூட்டணி உறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி, தனித்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளது. இதனைதொடர்ந்து வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என … Read more

எடப்பாடி தொகுதியில் போட்டி: நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் முதல்வர்!

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பழனிசாமி, நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அடுத்தகட்ட பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் முதல்வர் பழனிசாமி, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அவர், நாளை தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்காக … Read more

நாளை மறுநாள் வெளியாகவுள்ளதா தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல்?

தேமுதிகவின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியாவதாக அக்கட்சியின் துணைச் செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் தாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காத காரணத்தினால் கூட்டணியில் இருந்து விலகியது. அதனைதொடர்ந்து அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உறுதிப்படுத்தினார். அதுகுறித்து அவர் கூறுகையில், எப்போது வேண்டுமானாலும் கூட்டணி இறுதி செய்யப்படலாம் என தெரிவித்தார். இதனால் விரைவில் அமமுக- தேமுதிகவுடன் கூட்டணி உறுதியாகும் என … Read more

#ElectionBreaking: புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் மநீம கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய கட்சியின் 18 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியானது. புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி காட்சிகளுக்கான தொகுதிகளையும், வேட்பாளர்களின் பட்டியல்களையும் அறிவித்து வருகிறது. அந்தவகையில் மக்கள் நீதி மய்யம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, ராஜ்பவன் – பர்வத வர்தினி  இந்திரா … Read more

#Breaking: சென்னைக்கு அதிமுக புதிய செயலாளர்கள் நியமனம்!

சென்னைக்கு அதிமுக புதிய செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், அதன் பணியில் அதிமுக தீவிரமடைந்துள்ளது. முதல்வர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அடுத்த கட்ட பணிகளில் தீவிரமாக உள்ளது. இந்தநிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து, சென்னைக்கு கட்சியின் புதிய செயலாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், வடசென்னை தெற்கு (கிழக்கு) ராயபுரம், திருவிக நகர் – D.ஜெயக்குமார். … Read more