காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம்..!ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ..!

காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8.09 மணிக்கு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது.இந்நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டின் இருபுறமும் கடந்த 2005ல் ஏற்பட்ட பூகம்பத்தால் 80,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவுக்கு மேற்கே கடல்பகுதியில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ள பசிஃபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்க மையத்திலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் வெர்ஜின் தீவுகள், புயுரிடோ ரிக்கா மற்றும் மெக்சிகோவின் சில பகுதிகளுக்கும் … Read more

காஷ்மீரில் அதிகாலையிலேயே நிலநடுக்கம்

காஷ்மீரில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு அங்குள்ள வீடுகள் லேசாக குலுங்கின. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.1 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை. இதற்கு முன்னல் நேற்று, இமயமலை பகுதியில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் நேற்று இரவு 8.49 மணிக்கு திடீரென பூமி அதிர்வு ஏற்பட்டது. இந்த பூமி அதிர்ச்சி ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருந்தது. பூமிக்கு அடியில் 30 … Read more