மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கரீபியன் தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவுக்கு மேற்கே கடல்பகுதியில் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ள பசிஃபிக் சுனாமி எச்சரிக்கை மையம், நிலநடுக்க மையத்திலிருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் வெர்ஜின் தீவுகள், புயுரிடோ ரிக்கா மற்றும் மெக்சிகோவின் சில பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

source: dinasuvadu.com