பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் – மத்தியப் பிரதேச முதல்வர்!

பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் சார்பில் மகளிரணி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். மாநாட்டில் பேசிய அவர் நாட்டில் பசுக்கள் மற்றும் மாடுகள் இல்லாமல் பல வேலைகள் நடக்காது. எனவே அவை … Read more

ஏர் இந்தியா விமானத்தில் மாட்டு சாண வரட்டி கொண்டு சென்ற பயணி…!

ஏர் இந்தியா விமானத்தில் மாட்டு சாண வரட்டி கொண்டு சென்ற பயணி. அமெரிக்காவின் வாஷிங்டன், டல்லஸ் சர்வதேச விமான நிலையத்தில், ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சூட்கேஸ் ஒன்றை விட்டுச் சென்றுள்ளார். அமெரிக்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள், அந்த சூட்கேசை சோதனையிட்டபோது அதில் மாட்டுச் சாண வரட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. மாட்டு சாணம்,  இன்றும் சில பகுதிகளில், சமையல் எரிவாயுவாகவும், நுண்ணுயிர் கொல்லியாகவும் பல விதங்களில் பயன்படுகிறது. ஆனால், அமெரிக்காயாவில் … Read more

சத்தீகரில் அரசு வெளியிட்ட அறிவிப்பால் 100 கிலோ சாணம் திருட்டு! மர்மநபர்கள் கைவரிசை

சத்தீகரில் அரசு வெளியிட்ட அறிவிப்பால் 100 கிலோ சாணம் திருட்டு. மாடுகளை பொறுத்தவரையில், அவற்றின் பால் முதல் கழிவுகள் வரை அனைத்துமே எதோ ஒரு வகையில் பயனுள்ளதாக தான் உள்ளது. இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில், அம்மாநில அரசு விவசாயிகளுக்கு உதவும் வகையில், அவர்களிடம் இருந்து பசுவின் சாணம் விலைக்கு வாங்கப்படும் என தெரிவித்திருந்தது. இதனால், அந்த மாநிலத்தில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள கோரியா மாவட்டத்தின் கிராமத்தில், விவசாயிகள் வீட்டிலிருந்த 100 கிலோ சாணத்தை மர்மநபர்கள் … Read more

கரிம உரம் உற்பத்திற்கு ஒரு கிலோ மாட்டு சாணம் ரூ.2 கொள்முதல் – சத்தீஸ்கர் அரசு

பூபேஷ் பாகேல் இன்று “கோதன் ந்யோ யோஜ்னாவை” அறிமுகப்படுத்தினார். இதன் கீழ் கரிம உரங்களை உற்பத்தி செய்வதற்காக மாநில அரசு கால்நடை வளர்ப்பவர்களிடமிருந்து ஒரு கிலோ ரூ .2 க்கு மாட்டு சாணத்தை கொள்முதல் செய்யும் என்றார். நாட்டில் இந்த வகையான முதல் திட்டம் உள்ளூர் ஹரேலி விழாவில் தொடங்கப்பட்டது. மேலும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கவும், கால்நடைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் விரும்புகிறது என கூறினார். தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற விழாவில் இந்தத் … Read more