3 மாநில முதல்வர்கள் யார்.? மேலிட பொறுப்பாளர்களை நியமித்த பாஜக.!

Union minister Amit shah - PM Modi - JP Nadda

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த 5 மாநில தேர்தலில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 5 மாநில தேர்தலில் ஒரே ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி தெலுங்கானா மாநில முதல்வர் யார் என உடனடியாக அறிவித்து நேற்று ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநில முதல்வராக பொறுப்பேற்று விட்டார். ஆனால் , 3 மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக இன்னும் … Read more

12ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் எடுத்தால் கல்வி கட்டணம் இலவசம்.! ம.பி முதல்வர் அதிரடி அறிவிப்பு.!

12ஆம் வகுப்பு அரசு தேர்வில் 75 சதவீதம் மதிப்பெண்ணுக்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தால் மருத்துவம், பொறியியல், வழக்கறிஞர் படிக்க கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என மத்திய பிரதேச முதல்வர் அறிவித்தார்.  மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று ஓர் அசத்தலான அறிவிப்பை வெளியிட்டார். அதில், மத்திய பிரதேச மாநிலத்தில் , 12ஆம் வகுப்பு மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் கல்வி கட்டணம் இலவசம் என அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்பு அரசு … Read more

தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள்… 2 முக்கிய அதிகாரிகளை அதிரடியாய் சஸ்பெண்ட் செய்த ம.பி முதல்வர்.!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கடமையை சரியாக செய்யாததாக கூறி இரண்டு அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.   மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அலட்சியமாக இருந்ததாகக் கூறி ஷிவ்புரியின் தலைமை முனிசிபல் அதிகாரி (CMO) ஷைலேஷ் அவஸ்தியையையும், பிச்சோரின் ஜூனியர் உணவு அதிகாரி நரேஷ் மஞ்சி ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதாக கூறினார். அவர் கூறுகையில்,  ‘ நல்ல பணி செய்யும் அதிகாரிகளை … Read more

பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் – மத்தியப் பிரதேச முதல்வர்!

பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் சார்பில் மகளிரணி மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். மாநாட்டில் பேசிய அவர் நாட்டில் பசுக்கள் மற்றும் மாடுகள் இல்லாமல் பல வேலைகள் நடக்காது. எனவே அவை … Read more

மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதி உதவி!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என மத்திய பிரதேசத்தின் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக பரவி கொண்டே இருக்கிறது. கொரோனாவின் இரண்டாம் அலையினால்  ஒவ்வொரு மாநிலங்களிலும் தினமும் அதிக அளவிலான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தங்கள் மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில அரசுகள் வெவ்வேறு நிதி உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில், … Read more

இலவச கல்வி, ரேஷன் மற்றும் மாதம் 5000 ஊக்க தொகை – பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய பிரதேச அரசு சலுகை!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, ரேஷன் மற்றும் மாதம் 5000 ஊக்க தொகை ஆகியவை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து  கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் … Read more

பறவைக் காய்ச்சல் எதிரொலி.. கேரளாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு தற்காலிக தடை..!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று தனது இல்லத்தில் மூத்த அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை நடத்தினார். அப்போது, கோழி வணிகம் மற்றும் பிற பறவைகளின் வர்த்தகத்தை தென்னிந்தியாவின் சில மாநிலங்களுடன் குறுகிய காலத்திற்கு நிறுத்த முடிவு செய்தார் என கூறப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள எந்த கோழி பண்ணையிலும் பறவைக் … Read more