கொரோனா தடுப்பு குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆளுநருடன் அவரச ஆலோசனை.!

கொரோனா வைரஸிற்கு உலக நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் இந்த வைரஸால் முதல் உயிர் பறிபோகியுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு  ஊரடங்கு உத்தரவினை … Read more

கொரோனா பாதிப்பு எதிரொலி ! டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை மட்டும் அல்லாது உலகில் உள்ள பல நாடுகளையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் தற்போது வரை 30-பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.