சுய ஊரடங்கை கடைபிடிக்கவிட்டால், ஏப்ரல் மாதத்தில் மருத்துவனை நிரம்பி வழியும் – இந்திய நுண்ணுயிர் மருத்துவர் சங்கம்

கொரோனா பாதிப்பு இந்தியாவில் 400-க்கும் மேற்பட்ட மக்களை பாதித்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, 22-ம் தேதி ஞாயிற்க்கு கிழமை ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில், மக்கள் இத்தனை சரியாக கடைபிடிக்கவில்லை என பிரதமர் வருத்தம் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 31 வரை சுய ஊரடங்கை கடைபிடிக்காமல் அலட்சியம் காட்டினாள் ஏப்ரல் மாதத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என இந்திய நுண்ணுயிர் … Read more

கொரோனா பாதிப்பு எதிரொலி ! டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் சீனாவை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை மட்டும் அல்லாது உலகில் உள்ள பல நாடுகளையும் இந்த வைரஸ் அச்சுறுத்தி வருகிறது.இந்தியாவில் தற்போது வரை 30-பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளுக்கு நாளை முதல் மார்ச் 31-ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.