நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…!

நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் கடலோர பகுதிகளில் உள்ள சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். மேலும் நீலகிரி, … Read more

புரேவி எதிரொலியாக ஆறு தென்மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

புரேவி புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆறு தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது புயலாக வலுவடைந்ததையடுத்து புரேவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயல் சுமார் பாம்பனுக்கு கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் இந்த … Read more

தமிழகத்தில் ஈரப்பதத்தின் அளவு குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஈரப்பதத்தின் அளவு குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக தான் காணப்டுகிறது. இங்கு அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. எனவே முன்பை  விட தற்போது வெப்பத்தின் அளவு அதிகமாக தான் காணப்படுகிறது.  இந்நிலையில், வங்கக்கடலில் தோன்றிய ஆம்பன் புயல் ஒடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்ந்ததால், தமிழகத்தில் ஈரப்பதத்தின் அளவு குறைந்துள்ளது.  இதனால்,அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் … Read more

மே 16 ஆம் தேதி புயலாக உருவெடுக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!

தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று காணொளிக்காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன், தெற்கு வங்க கடலில் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 15 ஆம் தேதி காற்றழுத்த மண்டலமாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளார். இதன் பிறகு … Read more

இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சில பகுதிகளில், மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில்,  கோயம்புத்தூர்,  நீலகிரி, தேனி,  திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் … Read more