தமிழகத்தில் ஈரப்பதத்தின் அளவு குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஈரப்பதத்தின் அளவு குறைந்ததால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்.

தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக தான் காணப்டுகிறது. இங்கு அக்கினி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. எனவே முன்பை  விட தற்போது வெப்பத்தின் அளவு அதிகமாக தான் காணப்படுகிறது. 

இந்நிலையில், வங்கக்கடலில் தோன்றிய ஆம்பன் புயல் ஒடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்ந்ததால், தமிழகத்தில் ஈரப்பதத்தின் அளவு குறைந்துள்ளது.  இதனால்,அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.