உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவியேற்பு!

உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற தீபங்கர் தத்தா 2030 பிப்ரவரி வரை பதவி வகிப்பார். உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதிவியேற்று கொண்டார். இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை தற்போது 28-ஆக உயர்ந்துள்ளது. தீபங்கர் தத்தாவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபங்கர் தத்தா 2030 பிப்ரவரி வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பார்.

“பெண்கள் வேலைக்கு செல்வது அவசியமில்லை” – மும்பை ஐ-கோர்ட் தீர்ப்பு

ஒரு பெண் பட்டதாரி என்பதால் அவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை என தீர்ப்பு. ஒரு பெண் பட்டதாரி என்பதற்காக வேலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தொடர்ந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பில் வேலை செய்வது அல்லது வீட்டில் உட்கார்ந்திருப்பது ஒரு பெண்ணின் விருப்பம், ஒரு பெண் பட்டதாரி என்பதால் அவர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை என்று தீர்ப்பு … Read more