அப்படி என்ன ஸ்பெஷல் தான் உள்ளது இந்த மாருதி சுசுகி ஸ்விப்டில் ?இதோ அதன் சிறப்பு ….

மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமாக உள்ளது.இந்நிலையில் மாருதியின் புகழ்பெற்ற காரான ஸ்விப்ட்  விற்பனையில்  பல்வேறு சாதனைகளை   படைத்துள்ளது. இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் காராக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக வலம்வந்து கொண்டிருக்கிறது. மாருதி ஸ்விப்ஃட் கார் இந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இதன் மேம்பட்ட 3ம் தலைமுறை இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. புதிய 2018 ஸ்விஃப்ட், காரானது தற்போதுள்ள மாடலை விட ரூ.60,000 கூடுதல் விலை … Read more

நச்சுப்புகை பாதிப்புகளை அறிய மனிதர்களை பயன்படுத்திய பிரபல கார் நிறுவனங்கள்!

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் டீசல் கார்களில் வரும் புகை மிகவும் நச்சுதன்மையாக இருப்பதால் தனது வாகனங்களை திரும்பப்பெற்றுள்ள நிலையில் தற்போது உள்ள நிலையில் மீண்டும் சர்சையில் சிக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாளிதழ்கள் வெளியிட்ட செய்தியில், டீசல் கார்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய கடந்த 2015 ஆம் ஆண்டு போக்ஸ்வேகன் ஆய்வு நடத்தியதாக கூறியுள்ளது. ஆய்வில், குரங்குகளை தனித்தனியாக கண்ணாடி பெட்டிகளில் அடைத்து நச்சுப்புகையை உட்செலுத்தி அபாயகரமான சோதனை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. மனிதர்கள் மீதும் இதுபோன்ற … Read more

நிசான் நிறுவனத்தின் மிகக்குறைந்த விலையில் மின்சாரக் கார்கள்!

நிசான் நிறுவனம் இந்தியாவில் நிரந்தர இடத்தை பிடிக்க ஒரு முயற்சியாக மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது . ஏற்கனவே  லீஃப் என்ற மின்சாரக் காரை தயாரித்திருந்த நிஸ்ஸான் நிறுவனம், அதை இந்தியாவில் விற்பனை செய்வதில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தது. இந்த நிலையில், 7 லட்சம் ரூபாயில் இருந்து ஆரம்பாகும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை அந்த நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிஸ்ஸான் நிறுவன அதிகாரிகள் … Read more

கடந்த டிசம்பரில் இருசக்கர வாகன விற்பனை உயர்வு! கார் விற்பனை சரிவு….

இந்தியாவை பொறுத்தவரை வாகன விற்பனையில் இருசக்கர வாகனம்  மற்றும் கார்கள் இடையே விற்பனையின் அளவு அதிகாமாக தான் விற்பனையாகும் ஆனால் இதற்கு மாறாக   கடந்த டிசம்பரில் 2,39,712 பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய 2016 டிசம்பரில் 2,27,823 வாகனங்கள் விற்பனையான நிலையில், 5.22 சதவீத அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளது. கார்களின் விற்பனையை பொறுத்தவரை 2016ம் ஆண்டு டிசம்பரை ஒப்பிட்டால் கடந்த டிசம்பரில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது. 2016 டிசம்பரில் 1,58,617 கார்கள் விற்பனையான நிலையில் கடந்த டிசம்பரில் … Read more

ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகன விற்பனை 43% உயர்வு

இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை டிசம்பரில் 43 சதவீதம் அதிகரித்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பவன் முஞ்சால் தெரிவித்ததாவது: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு 2017ஆம் ஆண்டு மிக முக்கியமானதாக மாறியுள்ளது. நிறுவனத்தின் சந்தை பங்களிப்பை மேலும் வலுப்படுத்திய ஆண்டாக அது அமைந்தது. சவாலான சூழ்நிலைகளுக்கிடையிலும் சென்ற டிசம்பரில் 4,72,731 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது அதற்கு முந்தைய ஆண்டு விற்பனையான 3,30,202 … Read more

பைக்ல இதுவும் இருக்க கூடாது : மத்திய அரசு புது உத்தரவு

மோட்டார் வாகன சட்டம் தினம் தினம் புதுபுது சட்டங்களை புகுத்தி மக்களை குழப்ப்புகிறது. இதன்படி, தற்போது கார்கள், மற்றும் இருசக்கர வாகனங்களில் ‘கிரஸ் கார்ட்’ அல்லது ‘புல் பார்’ என்று அழைக்கபடும் தடுப்பு கம்பிகள் பொருத்துவது குற்றம் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. அவ்வாறு புல் பார் பொருத்துவது மோட்டார் வாகன சட்டத்தின் 52ஆம் பிரிவை மீறுவதாக அமைகிறது. மேலும் அந்த சட்டத்தின் 190 மற்றும் 191-ம் பிரிவின் படி தண்டனைகுரிய குற்றமாகும். எனவே இதனை … Read more

200சிசி களத்தில் புதிய மாடலை களமிறக்கும் ஹீரோ நிறுவனம்

200சிசி பைக் மாடலில் புதிதாக களமிறக்க புதிய மாடலை ஹீரோ நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200சிசி மோட்டிவ். இவை 2016ஆம் ஆண்டில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் பைக்கில் 18.6PS ஆற்றலை 8500 rpm மற்றும் 17.2 Nm டார்க்கினை 6000 rpm சுற்றில் வழங்கும் புதிய ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் 200cc 4 ஸ்டோர்க் என்ஜினை பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர் பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மல்டி … Read more

மின்சார மோட்டார் வாகனங்களை தயாரிக்கும் யமாக நிறுவனம்

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும், மாசு கட்டுப்பாடு காரணமாகவும் மின்சார வாகனங்களின் மீது அரசும், வாகன ஓட்டிகளும்  மோகம் கொண்டுள்ளனர். அதனால் பல நிறுவனங்கள் மின்சார  வாகனங்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன. இதில் யமகா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர மோட்டார் வாகனத்தை வெளியிட ஆராய்ந்து வருகிறது.   தனியார் இதழுக்கு யமஹா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘நாங்கள் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனனங்களை செயற்படுத்த தொடங்கியுள்ள நிலையில், … Read more

அடுத்த ஆண்டு முதல் கார்கள் விலை உயருகிறது!

இந்தியாவின் 3வது பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மகிந்திரா & மகிந்திரா நிறுவனம், உயர்ந்து வரும் உள்ளீட்டு செலவுகளின் காரணமாக தனது ஒட்டுமொத்த வாகன மாடல்களின் விலையில் 3% உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி பயணியர் வாகனங்களில் முன்னணியில் இருக்கும் ஸ்கார்பியோ, எக்ஸ்யூவி500 முதல் கமெர்சியல் வாகனங்களான பிக்-அப் டிரக்குகள், பஸ்கள், லாரிகள், டிராக்டர்கள் வரையில் அந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளிலும் வரும் ஜனவரி முதல் 3% வரை விலை … Read more

பி.எம்.டபிள்யு-வின் புதிய பைக் ஜி310

பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யு ஜி310 ஆர் என்ற பைக் மாடலை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் பல மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த பைக் சர்வீஸ் மற்றும் விற்பனை துறையில் நிலவி வந்த சில தடங்கல்கள் காரணமாக ஜி310 ஆர் பைக்கின் இந்திய வருகை தாமதமாகிக்கொண்டே வந்தது.கடந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில் முதன்முதலாக பி.எம்.டபிள்யு ஜி 310 இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டது. டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து இவ்வகை பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் என அப்போதே … Read more