மின்சார மோட்டார் வாகனங்களை தயாரிக்கும் யமாக நிறுவனம்

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவும், மாசு கட்டுப்பாடு காரணமாகவும் மின்சார வாகனங்களின் மீது அரசும், வாகன ஓட்டிகளும்  மோகம் கொண்டுள்ளனர். அதனால் பல நிறுவனங்கள் மின்சார  வாகனங்களை உற்பத்தி செய்ய முன்வந்துள்ளன. இதில் யமகா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர மோட்டார் வாகனத்தை வெளியிட ஆராய்ந்து வருகிறது.

 

தனியார் இதழுக்கு யமஹா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘நாங்கள் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனனங்களை செயற்படுத்த தொடங்கியுள்ள நிலையில், இதனை இந்திய சந்தைக்கும் கொண்டு வருவது எங்களுக்கு கடினமாக இருக்காது’ என கூறினார்.

இதற்காக பல ஆய்வுகளை யமஹா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஐசி எஞ்சின்களுக்கு மாற்றாக இந்திய சந்தையில் மின்சார வாகனங்கள் அமையாது எனவும் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, தொடர்ந்து ஐசி எஞ்சின்களை விற்பனை செய்யவும், கூடுதலாக மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment