நேற்றுவரை 38 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர்-மாவட்ட ஆட்சியர் பொன்னையா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது விழாகோலம் பூண்டு  காட்சி அளிப்பதற்கு காரணம் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர். அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அந்த வகையில் 28-ஆம் நாளான இன்று அத்திவரதர் வெளிர் நீலநிறப் பட்டாடை அலங்காரத்தில் காட்சியளித்து வருகிறார்.இன்று விடுமுறை தினம் என்பதால் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 27 நாட்களில், 38 லட்சத்து … Read more

கடவுள் நம்பிக்கை மட்டுமே மனிதனின் ஒழுக்கத்தை மேம்படுத்தும்-புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தில் கலந்து கொண்டார்.அங்கு வந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அத்திவரதரை தரிசனம் செய்தார் .இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில், அனைத்து மதத்தினரும் தங்களது மத கோட்பாட்டை கடைபிடிக்க உரிமை உண்டு.கடவுள் நம்பிக்கை மட்டுமே மனிதனின் ஒழுக்கத்தை மேம்படுத்தும் என்று நாராயணசாமி தெரிவித்தார்.

அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்!திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது விழாகோலம் பூண்டு  காட்சி அளிப்பதற்கு காரணம் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர். அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று  அத்திவரதர் உற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார்.இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள  தலைமை  செயலகத்தில் அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.மேலும்  அன்னதான திட்டத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி ரூ.1 லட்சம் நன்கொடை … Read more

ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  அத்திவரதர் தரிசனத்திற்காக இதுவரை 3.41 லட்சம் வாகனங்கள் காஞ்சிபுரம் வந்துள்ளன. நிழற் கூடம், மருத்துவ முகாம், காவல் உதவி மையங்கள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பக்தர்கள் வசதிக்காக 1,250 சக்கர நாற்காலிகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது-தலைமை  செயலாளர் சண்முகம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 21-வது நாளான இன்று ரோஸ் நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார்.இன்று விடுமுறை தினம் என்பதால்  அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் அத்திவரதர் தரிசனம் குறித்து தமிழக தலைமை  செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அத்திவரதர் உற்சவத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,000 … Read more

அத்திவரதரை தரிசித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலில் 40 வருடங்களுக்கு ஒரு முறை அத்திவரதர் தரிசனம் நடைபெரும். இதற்கு முன்னர் கடந்த 1979 ம் ஆண்டு அத்திவரதர் தரிசனம் நடைபெற்றது. அதன் பின் இந்த ஆண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தரிசனத்திற்கு நாள் தோறும் லட்சக்கணக்கானோர் வரும் நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்று அத்திவரதரை தரிசிக்க  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.இதனால் காஞ்சிபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. … Read more