மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும் காரணம்.?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21 ஆம் தேதி தமிழகத்தில் திட்டங்களை துவக்கி வைக்க வருகிறார்.  தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அமித்ஷா வருகை என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகை பா.ஜ.க.விற்கு உத்வேகத்தை அளிக்கும் என்றார். இந்நிலையில், அமித்ஷா தமிழக வரும் நோக்கம் என்னவென்றால் தமிழகத்தில் நீர்த்தேக்கம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டத்தை வருகின்ற 21ஆம் தேதி … Read more

#BREAKING: 21-ஆம் தேதி அமித் ஷா தமிழகம் வருகை..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21-ஆம் தேதி தமிழகம் வருகிறார். பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அமித் ஷா தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழகத்தில் தற்போது பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வரும் நிலையில் தற்போது அமித்ஷா வருகை தர உள்ளார்.

அமித்ஷாவின் டி.பி-யை முடக்கிய ட்வீட்டர்! காரணம் என்ன?

ட்வீட்டரில் முடக்கி வைக்கப்பட்ட அமித்ஷாவின் சுயவிவர படம். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக, ட்வீட்டரில் அதிகமான ஃபாலொவெர்சை கொண்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இவரை, 23.6 மில்லியன் பேர் பின்தொடருகின்றனர். இந்நிலையில், இவரது ட்வீட்டர் பக்கத்தில்,  சில நிமிடங்கள் இவரது சுய விவர படம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, ‘media not displayed’ என தோன்றியது. இதுகுறித்து, ட்வீட்டர் தரப்பில், புகைப்படம் பதிப்புரிமை விவகாரம் தொடர்பான ஒரு அறிக்கைக்கு பதில் கிடைக்காத நிலையில் … Read more

பாஜக மூத்த தலைவரான அத்வானியின் பிறந்தநாள் – நேரில் சென்று வாழ்த்திய பிரதமர் மோடி.!

பாஜக மூத்த தலைவரான அத்வானியின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரான அத்வானி இன்று தனது 93-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல அரசியல் தலைவர்களும்,கட்சி நிர்வாகிகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி அத்வானியின் இல்லத்திற்கு சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் அவரது காலில் விழுந்தும் மோடி அவர்கள் ஆசீர்வாதம் வாங்கியுள்ளார் . உள்துறை அமைச்சரான அமித்ஷா மற்றும் … Read more

வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்திய அமித்ஷா.!

காவலர் வீரவணக்க நாளான இன்று நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உள்துறை அமைச்சரான அமித்ஷா டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார். அதனுடன் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக முன்கள பணியாளர்களாக பணியாற்றிய 343 காவலர்கள் தங்களது உயிரையே தியாகம் செய்துள்ளதாகவும், அவர்களின் தியாகத்தை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த தேசிய காவலர் நினைவகம் வெறும் செங்கல், சிமெண்டுகளால் மட்டும் கட்டவில்லை … Read more

ராம் விலாஸ் பஸ்வானின் உடலுக்கு அமித் ஷா நேரில் அஞ்சலி

மத்திய அமைச்சர் அமித் ஷா ,மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் உடலுக்கு நேரில் சென்று  அஞ்சலி செலுத்தினார். லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் (74) கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 3-ஆம் தேதி அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.இதனிடையே நேற்று ராம்விலாஸ் பஸ்வான் நேற்று சிகிச்சை … Read more

சேகர் பாசு மறைவு அறிவியல் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும்- அமித்ஷா ட்விட் ..!

மூத்த அணு விஞ்ஞானியும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் சேகர் பாசு கொரோனாவால்  இன்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு வயது 68, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவர் 2014-இல் பத்மஸ்ரீ விருது பெற்றார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா  தனது ட்விட்டர் பக்கத்தில்  பதிவு ஒன்றை பத்திவிட்டுள்ளார். அதில்,  புகழ்பெற்ற அணு விஞ்ஞானி டாக்டர் சேகர் பாசுவின் மறைவு உலகெங்கிலும் உள்ள தேசத்திற்கும், அறிவியல் சமூகத்திற்கும் பெரும் இழப்பாகும். … Read more

விவசாயிகள் தொடர்பான மசோதா விவசாயிகளுக்கும், விவசாயத்துறைக்கும் ஊக்கத்தை அளிக்கும்- அமித் ஷா.!

நேற்று மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்ட விவசாயிகள் தொடர்பான, அத்தியாவசிய பொருட்கள் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள் அதிகாரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்த மசோதா 2020 மற்றும் விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020 ஆகிய 3 மசோதாக்களுக்கு  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  மோடி அரசு இந்த வரலாற்று … Read more

முழு மருத்துவ பரிசோதனைக்காக தான் அமித் ஷா அனுமதி.. எய்ம்ஸ் அறிக்கை..!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவர்களின் ஆலோசனைப்படி முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். பின்னர், ஆகஸ்ட் 14 -ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து, உடல் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற காரணங்களால் மீண்டும் … Read more

மீண்டும் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதி.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு  கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். பின்னர், ஆகஸ்ட் 14 -ம் தேதிடிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து,  உடல் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற காரணங்களால் மீண்டும் கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டார். 12 நாட்கள் சிகிச்சை பெற்று ஆகஸ்ட் இறுதியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும்  … Read more