#BREAKING: 21-ஆம் தேதி அமித் ஷா தமிழகம் வருகை..!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21-ஆம் தேதி தமிழகம் வருகிறார். பீகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அமித் ஷா தமிழகம் வருவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் ஆலோசிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழகத்தில் தற்போது பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வரும் நிலையில் தற்போது அமித்ஷா வருகை தர உள்ளார்.

author avatar
murugan

Leave a Comment